அருமையான சுவையில் அன்னாசிப்பழ கேசரி!

அன்னாசிப்பழ கேசரி
அன்னாசிப்பழ கேசரிwww.youtube.com
Published on

ன்னாசிப் பழத்தினை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் சளி மற்றும் இருமல் தீரும். எலும்புகள் வலுப்பெறும். பற்களுக்கு நன்மைபயக்கும். கேன்சரை வர விடாமல் பாதுகாக்கும். ஜீரணத்திற்கு உதவும். கண்களுக்கு மிகவும் நல்லது, ஆர்த்தரிடிஸை குறைக்க உதவும்.

இத்தனை நன்மைகளைக் கொண்ட அன்னாசியில் கேசரி செய்து கொடுக்கும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாசி கேசரி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

அன்னாசி-1கப்.

ரவை-1கப்.

ஜீனி-1 1/4 கப்.

நெய்- 8 தேக்கரண்டி+ எண்ணெய்-6 தேக்கரண்டி. இரண்டையும் கலந்து பயன்படுத்தவும்.

முந்திரி-10

 திராட்சை-10

ஏலக்காய் தூள்- தேவையான அளவு.

உப்பு- தேவையான அளவு.

மஞ்சள் நிற புட் கலர்- சிறிது.

அன்னாசி கேசரி செய்முறை விளக்கம்:

ரு பேஃனை எடுத்து அதில் கலக்கி வைத்திருக்கும் நெய் மற்றும் எண்ணையிலிருந்து மூன்று தேக்கரண்டி ஊற்றவும். இப்போது அதில் 10 முந்திரியை சேர்த்து நன்றாக தங்க நிறம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதைபோலவே திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு பேஃனில் இருக்கும் அதே நெய்யில் அன்னாசியையும் போட்டு நன்றாக 5 நிமிடம் வதக்கவும். இப்போது அதில் 2 ½ கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

அதே சமயத்தில் இன்னொரு பாத்திரத்தில் கலந்து வைத்திருக்கும் எண்ணை நெய் கலவையில் பாதியை ஊற்றிக்கொள்ளவும். அதில் ரவை ஒரு கப்பை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். ரவை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

இப்போது கொதித்து கொண்டிருக்கும் அன்னாசியில் ரவையை சேர்க்கவும். நன்றாக கட்டிப்பிடிக்காமல் சிறிது சிறிதாக சேர்த்து கிண்டவும். இப்போது அதில் 1 ¼ கப் ஜீனியை சேர்க்கவும். அத்துடன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கிண்டவும். இப்போது மீதம் இருக்கும் எண்ணை நெய் கலவையை சேர்த்து  இன்னும் நன்றாக கிண்டவும். நிறத்திற்கு மஞ்சள் நிற புட் கலர் சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.

இப்போது அதில் எண்ணை நெய் கலவையை 4 தேக்கரண்டி சேர்க்கவும். இதை மூடி வைத்து 5 நிமிடம் நன்றாக வேகவிடவும். அன்னாசி கேசரி நன்றாக வெந்ததும் அதில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை மற்றும் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். அவ்வளவு தான் இப்போது சுவையான அன்னாசி கேசரி தயார். இதை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com