வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு புதுமையான சுவையில், அதிக வேலை இல்லாமல் சுலபமாக செய்துவிடக் கூடிய இந்த மெக்சிகன் டிப்பை செய்து கொடுத்து பாராட்டுகளைப் பெறலாம். வேகவைத்த பீன்ஸ், பாலாடை கட்டி, காரத்திற்கு பச்சை மிளகாய், மிளகு தூள் என சேர்க்கப்பட்டு ருசியான இந்த மெக்சிகன் டிப் ரொட்டிகள், சான்ட்விச்கள், சீஸ் ஸ்ட்ராக்களுடன், பன்களில் என நிரப்பி பரிமாறலாம்.
ருசியான ராஜ்மா சீஸ்:
ராஜ்மா பீன்ஸ் ஒரு கப்
மசித்த சீஸ் க்யூப்ஸ் அரை கப்
உப்பு சிறிது
பச்சை மிளகாய் 1
மிளகுத்தூள் ஒரு ஸ்பூன்
செலரி இலைகள்
ராஜ்மாவை ஆறு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் நான்கு விசில் விட்டு சமைக்கவும். சிறிது ஆறியதும் நீரை முழுவதுமாக வடிக்காமல் சிறிது நீருடன் வடித்து எடுத்துக் கொள்ளவும். சீஸை கையால் நசுக்கி அத்துடன் சிறிது பால் கிரீம் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் வேகவைத்த பீன்ஸ், பொடியாக கீறிய பச்சை மிளகாய், மிளகுத்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு மசித்தாற்போல் கலக்கவும்.
மேலே அலங்கரிக்க நறுக்கிய செலரி இலைகளைத் தூவி ரொட்டிகள் அல்லது சாண்ட்விசுகளில் நிரப்பி பரிமாறவும். செய்து பாருங்கள். இதன் ருசியில் அடிக்கடி செய்யத் தூண்டும் சிம்பிள் ரெசிபி இது.
சுவையான கத்திரிக்காய் சில்லி கார்லிக்:
கத்தரிக்காய் பெரியது 1
தக்காளி 2
பூண்டு 6
கொத்தமல்லித் தழை சிறிது
சில்லி ஃப்ளேக்ஸ் 1/2 ஸ்பூன்
மிக்ஸட் ஹெர்ப்ஸ் 1/2 ஸ்பூன்
கருப்பு மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணெய் சிறிது
பெரிய கத்திரிக்காயை பாதியாக நறுக்கி எண்ணெய் தடவி கத்தியால் இரண்டு மூன்று இடங்களில் கீறிக் கொண்டு அதில் பூண்டை செருகி உப்பு தடவி வைக்கவும். தக்காளி இரண்டை தோல் நீக்கி சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.
ஓவனை 180 டிகிரி செல்சியஸ்க்கு 10 நிமிடம் வைத்து நன்கு சூடானதும் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
சிறிது ஆறியதும் கத்திரிக்காயின் தோல்களை நீக்கிவிட்டு தக்காளி சேர்த்து நன்கு மசிக்கவும். தேவையான உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ், மிக்ஸட் ஹெர்ப்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துவிட ருசியான கத்திரிக்காய் சில்லி கார்லிக் தயார்.