

தேவையான பொருட்கள்:
ரவை - 1/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் அல்லது வெண்ணெய் -3ஸ்பூன்
முட்டை -2
பால் -1 1/2கப்
செய்முறை:
ஒரு பேக்கிங் ட்ரேயை எடுத்துக்கொண்டு அதில் நெய் அல்லது வெண்ணையை முழுவதுமாக கிரீஸ் செய்துகொள்ள வேண்டும்.
பாகு காய்ச்சும் முறை:
ஒரு பாத்திரத்தில் 1/4 கப் சர்க்கரையை எடுத்துக்கொண்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து தண்ணீர் ஊற்றாமல் கைவிடாமல் கிண்ட வேண்டும். சிறிது நேரத்தில் சர்க்கரை தானாகவே உருகி பிரவுன் கலரில் தண்ணீராக மாறிவிடும். இந்தப் பதத்தில் அடுப்பை அணைத்து விட்டு உடனடியாக நெய் தடவிய பேக்கிங் ட்ரேக்கு மாற்றி விட வேண்டும்.
ஒரு ஃபேனை எடுத்துக்கொண்டு அதில் 1 1/2கப் பால், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து உருகியவுடன், 1/4 கப் சர்க்கரையை சேர்த்து கிளறவேண்டும். பிறகு 1/4 கப் ரவையை சேர்த்து கலந்துவிட வேண்டும். இந்த கலவையை கேசரி பதத்திற்கு இறக்காமல் ,அதற்கு முன் சற்று தண்ணீர் இருக்கும் அளவுக்கு கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து விடவேண்டும்.
ஒரு பவுலில் இரண்டு முட்டையை எடுத்து நன்கு பீட் செய்து கொள்ள வேண்டும். இதனுடன் வெதுவெதுப்பாக இருக்கும் ரவை கலவையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்து கொண்டே முழுவதுமாக கலந்து விடவேண்டும்.
கெட்டியாக இல்லாமலும், தண்ணீராக இல்லாமலும் இருக்கும் இக்கலவையை பாகு காய்ச்சிய பேக்கிங் ட்ரேயில் ஊற்றி ஒரு மூடி போட்டு மூடி ,இட்லி பாத்திரத்தில் வைத்து மூடிபோட்டு குறைந்த தீயில் 20 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
பிறகு ட்ரேயை நன்கு ஆறவைக்க வேண்டும். நன்கு ஆறிய டிரேயை ஐந்து நிமிடம் குளிர்சாதன பெட்டியில் உள்ள பிரீசரில் வைக்கலாம். (குளிர் காலமாக இருந்தால் ஃப்ரீசரில் வைக்க தேவையில்லை.)
இப்போது ஒரு தட்டில் பேக்கிங் ட்ரேயை வைத்து தட்டி ட்ரேயை எடுத்து பார்க்கும்போது அருமையான ரவா ஃபுட்டிங் தயார். இதனை விருப்பமான அளவுகளில் கட் பண்ணி சாப்பிடும்போது, வாயில் வைத்த உடன் கரைந்து மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.