ஒட்ஸில் சுவையான இனிப்பு மற்றும் கார பணியாரம் வகைகள்!

இனிப்பு பணியாரம்
இனிப்பு பணியாரம் amil.webdunia.com

ட்ஸில் மட்டும் தான் 24 விதமான தாவர உயிர்க் கூறுகள் உள்ளன. பிற நோய்களை தடுக்கும் துத்தநாக உப்பு  இதில் உள்ளதால் ஓட்ஸ் கஞ்சி குடிக்கும் நோயாளி விரைவில் குணமடைகிறார். இதை மற்ற மாவுகளுடன் சேர்த்து இட்லி, தோசை, பணியாரம் என்று செய்து அசத்தலாம். இனிப்பு மற்றும் காரப்பணியாரங்கள் செய்யும் முறையை இதில் காண்போம்.

இனிப்பு பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

இட்லி மாவு -அரைகப்

ஓட்ஸ் மாவு- அரை கப்

வெள்ளை ரவை -அரைகப்

வெல்லத் துருவல் -1 கப்

பல்லு பல்லாக சீவிய தேங்காய்த் துண்டுகள்- ஒரு டேபிள் ஸ்பூன்

 நட்ஸ் ப்ளேக்ஸ்- ஒரு டேபிள் ஸ்பூன்

ஏலப்பொடி- இரண்டு சிட்டிகை

உப்பு எண்ணெய் -தேவைக்கு

செய்முறை:

ண்ணெயைத் தவிர அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீரை விட்டு பணியாரம் ஊற்றுவதற்கு தகுந்தார்போல் கரைத்து வைக்கவும். 

பணியாரக் குழிகளில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் மாவை ஊற்றி இரண்டு பக்கமும் சிவப்பானதும் திருப்பிப்போட்டு எடுத்து வைக்கவும். தேங்காய், நட்ஸ் எல்லாம் கலந்து சுவையில் அசத்தும்.

கார பணியாரம்:

கார பனியாரம்
கார பனியாரம்

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் பொடி-1/2கப்

கார்ன் பிளேக்ஸ் பவுடர்-1/2கப்

பொடிரவை-1/2கப்

தயிர்- ஒரு கப் 

வெங்காயம், கேரட், பீன்ஸ், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, எல்லாவற்றையும் பொடியாக அரிந்தது -ஒன்றரை கப், உப்பு' எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

யிரில் மாவுகளை கலந்து உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊறவிடவும். பிறகு காய்கறிகளையும் அதனுடன் சேர்த்து நன்கு கலந்து, பணியார கல்லை சூடு படுத்தி எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்ததும் பணியாரங்களாக ஊற்றி ஒரு பக்கம் சிவந்ததும் நன்கு  திருப்பி போட்டு சிவக்க விட்டு எடுக்கவும். விக்காமல் இருக்க ஏதாவது ஒரு சட்னி உடன் சாப்பிடலாம். சும்மா சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும். சத்துக்கு சத்து ருசிக்கு ருசி. 

இதையும் படியுங்கள்:
உடல் எடையை குறைக்க உதவும் ஐந்து எளிய பானங்கள்!
இனிப்பு பணியாரம்

ஓட்ஸை வாங்கி அலமாரிகளில் 'ஷோ'வாக வைத்திருப்பவர்கள் இப்படி செய்து சாப்பிட்டு பயன் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com