சுவைமிகு வித்தியாசமான ரெசிபிஸ்!

ரெசிபி கார்னர்!
சுவைமிகு வித்தியாசமான ரெசிபிஸ்!
-அபர்ணா சுப்ரமணியம், சென்னை

தால் ஃபரா

தேவை: ½ கப் சென்னா பருப்பு, 2 சிறிய ஸ்பூன் இஞ்சி பெரிதாக நறுக்கியது, 2 பச்சை மிளகாய் பெரிதாக நறுக்கியது, 3 பூண்டு பற்கள், ½ ஸ்பூன் மஞ்சள் தூள், 1 பெரிய தேக்கரண்டி கொத்துமல்லி, 1 ஸ்பூன் ஆம்சூர் பவுடர், ¾ கப் ஆட்டா, ½ கப் அரிசி மாவு, 2 ஸ்பூன் எண்ணெய், 1/8 ஸ்பூன் சோடா பை கார்ப்; ரிபைண்ட் ஆயில், சிறிது சாட் மசாலா மிளகாயத்தூள், உப்பு.

செய்முறை: சென்னா பருப்பை ஏறத்தாழ 6 மணி நேரம் நீரில் ஊற வைத்து, நீரை வடித்து, பூண்டு சேர்த்து கரகரவென்று அரைத்து, மீதியுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்க்கவும். பின்னர் இருவகை மாவில் சோடா பைகார்ப், சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து 20 நிமிடங்கள் மாவை மூடி வைக்கவும். பின்னர் இம்மாவை மெல்லிய ரொட்டிகளாகத் திரட்டி மேற்சொன்ன பருப்பு பூரணத்தைப் பரப்பி, கைகளால் ரோல் செய்து, மூலைகளை மூடி, கொதிக்கும் நீரில் 10 நிமிடம் வேக வைத்து, பொன்னிறமாகப் பொரித்து, சாட்மசாலா தூவி சட்னியுடன் சர்வ் செய்யவும்.

மேவா தஹிவடா

தேவை: பால், ரவை – தலா ½ கப், தண்ணீர் – 2 கப், சீரகம் – ½ ஸ்பூன், பெரிதாக நறுக்கிய உலர் பழங்கள் – 2 பெரிய தேக்கரண்டி, புதிய தயிர் – 1 கப், சுக்கு, கொத்துமல்லி சட்னி, உப்பு, சீரகப்பவுடர், மிளகாயத்தூள், ஆயில்.

செய்முறை: நான்ஸ்டிக் கடாயில் 2 நிமிட நேரம் ரவையை வறுக்கவும். கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் சீரகத்தைப் போட்டு, அதில் பால் மற்றும் நீர் சேர்த்துப் பிறகு ரவையைப் போட்டுக் கிளறவும். கலவை வெந்து உருட்டும் பக்குவத்தில் வந்ததும், அடுப்பை நிறுத்திவிட்டுக் கலவையை ஆறவிடவும்.  ஒரு கடாயில் மீண்டும் எண்ணெயைச் சூடாக்கி, சிறு சிறு உருண்டைகளாக கலவையை உருட்டி, நடுவில் உலர்பழம் வைத்து மூடி, பின்னர் கையில் வைத்து வடைபோல் தட்டி மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பிறகு ஒவ்வொரு வடையையும் தயிரில் டிப் செய்து, தட்டில் வைத்து மேலே தயிர் ஊற்றி, உப்பு, மிளகாய்த்தூள், சீரகப்பவுடர் மற்றும் சுக்குத்தூள் போட்டு, கொத்துமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

பனீர் ப்ரிட்டர்ஸ்

தேவை: 3 பெரிய தேக்கரண்டி அரிசி மாவு, கடலை மாவு, மோர் – தலா 1 கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன், 1 சிட்டிகை சோடா மாவு, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ½ ஸ்பூன் மிளகாய்த்தூள், 200 கிராம் பனீர், ¼ கப் புதினா மற்றும் கொத்துமல்லி சட்னி, ஃப்ரிட்டர்ஸ் கொதிக்க ஆயில், சுவைக்கேற்ப உப்பு.

செய்முறை: கடலை மாவுடன் அரிசி மாவு சேர்த்து அதில் மோர் ஊற்றி நன்றாகக் கெட்டியாகக் கரைத்து 3 மணி நேரம் மூடி வைக்கவும். பனீரை 1 இன்ச் அளவுள்ள துண்டுகளாக நறுக்கவும். இதை ஸ்லிட் செய்து பச்சை சட்னியைச் சேர்த்து தனியாக வைக்கவும். கடலை மாவு கலைவயில் மற்ற பொருட்களையும் சேர்க்கவும். கலவை மிகவும் திக்காக இருந்தால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும். தனியாக வைத்துள்ள சட்னி சேர்த்த துண்டுகளை மாவில் நனைத்து மிதமான தீயில் எண்ணெயில் ஃப்ரை செய்து, சட்னியுடன் பரிமாறவும்.

பாக்கர் பொடி

தேவை: மைதா மாவு – ¼ கப், டால்டா – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்ப் பொடி – 1 ஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கடலை மாவு – ½ கப், சோம்பு – ½ ஸ்பூன், உப்பு –
1 ஸ்பூன், வெல்லம் – ¼ கப், வெள்ளை எள் – 1 ஸ்பூன், மிளகு – ¼ ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு.

செய்முறை: கடலை மாவு, உப்பு ஆகியவற்றைக் கலந்து அதில் டால்டாவை உருக்கி சேர்த்துப் பிசைந்து வைக்கவும். (உப்புமாவுடன் கலந்து பிசைவதால் சுவையைக் கூட்டும்.) புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். வெல்லம், எள், மிளகு, சீரகப்பொடி, மிளகாய்ப் பொடி இவற்றைக் கலந்துவைக்கவும். மாவைச் சற்று கனமான சப்பாத்தியாக இட்டு, அதன்மேல் புளிச்சாறைத் தடவவும். கலந்து வைத்துள்ள பொடிகளை அதன்மேல் பரத்தி சுருட்டவும். கடலை மாவு பசையினால் உள்ளே பரத்தின மசாலா உதிராமலிருக்கும்.

நீளமாக உருட்டிய கலவையை முள்ளங்கி நறுக்குவது போல் வட்டமாக வெட்டி மெதுவாக எடுத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். மாலையில் காபி, டீ இவற்றுடன் சாப்பிட, இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவைமிகுந்த ஸ்னாக்ஸ் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com