பால் திரிஞ்சி போச்சா? அதை வைச்சு என்னவெல்லாம் பண்ணலாம் தெரியுமா?

Did the milk spoiled?
milk sweets
Published on

ம் வீட்டில் பயன்படுத்தும் பாலை ஒன்றிற்கு இரண்டு முறை நன்றாக காய்ச்சி உபயோகப்படுத்த வேண்டும். சில நேரங்களில் அப்படி பார்த்து பார்த்து பயன்படுத்தும் பால் திரிந்து போகும் வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு பால் திரிந்து போனால், அதற்காக வருத்தப்பட தேவையில்லை, பாலையும் எடுத்து கொட்டிவிட வேண்டாம். அதற்கு பதில் அதை வைத்து வித விதமான ரெசிபிஸை செய்யலாம். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1. பனீர் தயாரிக்கலாம்.

நம் வீட்டில் வழக்கமாக பனீர் செய்வதற்கு, பாலை நன்றாக காய்ச்சி அதில் ½ மூடி எழுமிச்சைப்பழ சாறை ஊற்றி திரிய வைத்து பிறகு நன்றாக வடிகட்டி எடுக்கும் போது பனீர் கிடைக்கும். சாதாரணமாக பால் திரிந்து விட்டால், அதில் சற்று புளிப்புத் தன்மையிருக்கும். அதை நன்றாக வடிகட்டி எடுத்தால் போதுமானது சுத்தமான மற்றும் ஆரோக்கியமான பனீர் தயார்.

2. பால்கோவா.

பால் திரிந்துவிட்டால், அதை நன்றாக வடிகட்டி பனீரை மட்டும் எடுத்து கடாயில் போட்டு அதில் 1 கப் சர்க்கரை, 1 தேக்கண்டி ஏலக்காய் தூள், 2 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக பத்து நிமிடம் கிண்டினால், சுவையான பால்கோவா திரண்டு வரும்.

3. ரசகுல்லா.

திரிந்த பாலில் இருந்து கிடைத்த பனீரை நன்றாக கையால் பிசைந்து மிருதுவாக்கி கொள்ளவும். இப்போது இதை சின்ன சின்ன பந்துகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து  2 கப் சர்க்கரைக்கு 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பாகு செய்யும்போது கம்பி பதம் தேவையில்லை. பிசுபிசுப்பாக இருந்தால் போதுமானது. அதில் ரோஸ் வாட்டர் 2 சொட்டுக்கள், இடித்த ஏலக்காய் 4 சேர்த்து கொதிக்க விடவும். இப்போது உருட்டி வைத்திருக்கும் பந்தை ஒவ்வொன்றாக பாகில் சேர்த்து 10 நிமிடம் மூடிக் கொதிக்க விட்டு இறக்கவும். ரசகுல்லா மீது குங்குமப்பூவால் அலங்கரிக்கவும். அவ்வளவுதான் சுவையான ரசகுல்லா தயார்.

4. பனீர் பட்டர் மசாலா.

திரிந்த பாலில் இருந்த எடுக்கப்பட்ட பனீரை நன்றாக வடிகட்டிய பிறகு துண்டு துண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு ஏலக்காய் 2, நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லி தூள் 1 தேக்கரண்டி, 10 முந்திரி சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் அதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் வீட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான மஞ்சள் பூசணி தோசை-பச்சை மிளகாய் மண்டி செய்யலாமா?
Did the milk spoiled?

அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் 2 தேக்கரண்டி, பிரிஞ்சி இலை 1, ஏலக்காய் 2, கிராம்பு 1 சேர்த்து வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி 10 நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கிரேவியில் எண்ணெய் பிரிந்து வரும் போது, வெட்டி வைத்திருக்கும் பனீரை அதில் சேர்த்து கிண்டி 2 நிமிடம் மூடி வேகவைத்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பனீர் பட்டர் மசாலா தயார். அடுத்த முறை பால் திரிந்து போனால், மறக்காமல் இந்த ரெசிபிஸை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com