வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் புளிக்காய்ச்சல்!

மிளகாய் புளிக்காய்ச்சல்...
மிளகாய் புளிக்காய்ச்சல்...www.youtube.com

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - பத்து

பச்சை மிளகாய் -15

புளி - கைப்பிடி அளவு

நல்லெண்ணெய் -1குழிக்கரண்டி

தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு 

உப்பு - தேவையான அளவு

பொடிக்க தேவையானவை:

கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன் 

மஞ்சள்- சிறிய துண்டு 

பெருங்காயம் -சிறிய துண்டு 

மல்லி விதை -1ஸ்பூன்

வெந்தயம் - ஒரு ஸ்பூன்

எள்- ஒரு ஸ்பூன் 

செய்முறை:

வெங்காயத்தில் பாதியை பொடியாகவும், பாதியை இரண்டாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியுடன் கல்லுப்பை சேர்த்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். 

பொடிக்க கொடுத்ததில் மஞ்சள், பெருங்காயத்தை எண்ணெயில் பொரித்து, மற்றவற்றை வெறுங்கடாயில் வறுத்து பொடிக்கவும். எள்ளை கையால் நன்றாக அழுத்தி பிசைந்து வைக்கவும். 

இதையும் படியுங்கள்:
பூமியில் தங்கம் எப்படி உருவானது தெரியுமா? 
மிளகாய் புளிக்காய்ச்சல்...

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய் வதக்கி புளிக்கரைசலை விட்டு, நன்கு கொதிக்கும் பொழுது பொடித்தவற்றை சேர்த்து நன்றாக வாசம் வரும் பொழுது, எள்ளை கையால் பிசைந்து சேர்த்து இறக்கவும். பச்சை மிளகாய் புளிக்காய்ச்சல் ரெடி. இது ரொம்பவே வித்தியான சுவையில் அசத்தும். அனைவருக்கும் பிடிக்கும். நாக்கை சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும். காலை நேர அவசர நேரத்தில் கை கொடுக்கும் இந்த புளிக்காய்ச்சல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com