மறைந்து வரும் பாரம்பரிய விறகடுப்பு சமையல்!

Firewood Cooking
Firewood Cooking

வளர்ச்சி என்ற பெயரில், தற்போது நாடெங்கிலும் நம் பாரம்பரியம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக உள்ளது. தொழில்நுட்ப வளரச்சியை குறை கூறவில்லை; அதேசமயம் நம் பாரம்பரியத்தை அழிக்காத வகையில், தொழில்நுட்ப வளர்ச்சி இருத்தல் வேண்டும்.

தற்காலத்தில் அனைவரது வீட்டு சமையலறையிலும் கேஸ் அடுப்பு தான் இருக்கிறது. இதன் விலை மாதாமாதம் மாற்றப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் குறைவாக இருந்த கேஸ் சிலிண்டரின் விலை தற்போது 3 மடங்குக்கும் மேல் அதிகரித்து இருக்கிறது. இது இனிமேலும் உயரலாம். தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பங்கு தான் கேஸ் அடுப்பு. இதனால் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த விறகு அடுப்பு மெல்ல மெல்ல காணாமல் போனது. இப்போது கிராமங்களில் ஒருசில வயதான பாட்டிகள் மட்டுமே விறகு அடுப்பில் சமைக்கின்றனர்.

கேஸ் அடுப்பு, இண்டக்சன் அடுப்பு மற்றும் ஓவன் போன்ற அடுப்புகள் தற்போது நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், அத்தி பூத்தாற் போல எங்காவது ஓரிடத்தில் தான் விறகடுப்பு பயன்படுத்தப்படுகிறது. மற்ற சமையல் அடுப்புகளில் சமைக்கப்பட்ட உணவுகளுடன் ஒப்பிடும் போது, விறகடுப்பில் சமைக்கும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். விறகடுப்பில் உதிர்ந்த மரக்கிளைகளும், சருகுகளும் விறகுகளும் பயன்படுத்தப்பட்டது. முன்பெல்லாம் விறகுகளை தானாகவே தேடிச் சென்று சேமித்து வைத்திருந்தனர். தற்காலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் தென்படும் விறகடுப்புகளுக்குத் தேவையான விறகுகளை பணம் கொடுத்து வாங்கும் நிலைமை தான் உள்ளது.

விறகடுப்பு கலாச்சாரம் குறைந்து போனதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் அதிலிருந்து வெளிவரும் புகையாகும். இன்றைய காலத்தினர் விறகடுப்பில் சமைப்பதை விரும்புவதில்லை. ஏனெனில், அவசரத் தேவைக்கு விறகடுப்பில் நேரம் ஆகலாம். மேலும், அவ்வப்போது அடுப்பை ஊத வேண்டிய நிலையும் உள்ளது. இச்சமயங்களில் அடுப்பில் இருந்து வெளிவரும் புகையை பலரும் விரும்புவதில்லை‌‌. இதன் காரணமாகவே இன்று பலரும் கேஸ் அடுப்பில் சமைப்பதை விரும்புகின்றனர்.

விறகடுப்பில் சமைக்கப்படும் உணவு எப்போதும் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும். மேலும் இதில் சமைப்பதால் செயற்கை சுவையூட்டிகளின் தேவையைக் குறைக்கலாம். இதனால் நமக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கும். விறகடுப்பில் உணவு சமைப்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றது. ஏனெனில் இந்த அடுப்பு மரத்தை மட்டுமே எரிபொருளாக நம்பி இருக்கிறது.‌ மின்சாரம் மற்றும் கேஸ் அடுப்புகளுடன் ஒப்பிட்டால், விறகடுப்பு கார்பன் பயன்பாடு மற்றும் ஆற்றல் நுகர்வு ஆகியவற்றைக் குறைக்கிறது.

இதையும் படியுங்கள்:
பொங்கி வரும் பருப்பு, அணஞ்சி போகும் அடுப்பு... நச்சுனு 4 கிச்சன் டிப்ஸ்! 
Firewood Cooking

அதிகமான வெப்பநிலையில் வெகு விரைவாக சமைப்பது, உணவின் அமைப்புகளைப் பாதுகாக்க உதவுகிறது. விறகடுப்பு சமையல் காய்கறிகள் மிகவும் மிருதுவாக இருப்பதையும், இறைச்சிகள் மென்மையாக இருப்பதையும் உறுதி செய்கிறது. விறகடுப்பு ஒட்டுமொத்த உணவு அனுபவத்தையும் மேம்படுத்தும். விறகு மட்டுமே மூலதனம் என்பதால், விறகடுப்பில் சமைக்க நமக்கு ஏற்படும் செலவும் மிக மிக குறைவு. பாரம்பரியத்தை கடைபிடிக்க தற்போது சில உணவகங்கள் முன்வந்துள்ளன. அவ்வகையில், சில உணவகங்களில் விறகடுப்பின் மூலம் சமைப்பது என்பது தற்போது பிரபலமான விளம்பர யுக்தியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com