
தேவையானவை:
சோயா சங்க்ஸ் பவுடர் – 1 கப், நெய் - ¼ கப், நாட்டுச் சர்க்கரை - ¾ கப், ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி, முந்திரிப் பருப்பு – 10, கிஸ்மிஸ் – 10.
1. முதலில் வாணலியில் ஒரு மேசைக் கரண்டி நெய்விட்டு முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழத்தை வறுத்து எடுத்துத் தனியே வைக்கவும்.
2. பிறகு சோயா சங்க்ஸ் பவுடர் போட்டு நல்ல வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
3. அடுப்பை அணைத்து விட்டு, அந்த வறுத்த மாவுடன் நாட்டுச் சர்க்கரை, வறுத்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.
4. உருண்டை பிடிக்க வருவதுபோல் மாவுக் கலவையில் நெய் விட்டுக் கலக்கவும்.
5. தேவையான அளவில் மாவை எடுத்து உருண்டைகளாகப் பிடித்தால் வித்தியாசமான, சுவையான சோயா சங்க்ஸ் லட்டு ரெடி! பின்குறிப்பு:
இதில் பால் பவுடர் கலந்தால் நல்ல சுவையாக இருக்கும். உலர் பழங்கள் நம் விருப்பம் போல் சேர்த்துக்கொள்ளலாம்.
கம்பு மாவு – 1 கப், அரிசி மாவு - ¼ கப், கடலை மாவு - ¼ கப், மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி, கறுப்பு/வெள்ளை எள் - 1 தேக்கரண்டி, பெருங்காயத் தூள் - ½ தேக்கரண்டி, வெண்ணெய் - 1 மேசைக் கரண்டி (அல்லது) சூடான எண்ணெய் - 1 குழிக் கரண்டி, உப்பு – தேவையானது, எண்ணெய் - பொரித்து எடுக்க,
1. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், எண்ணெய் தவிர மீதி உள்ள பொருட்களை எல்லாம் போட்டு நன்றாகக் கலக்கவும்.
2. வெண்ணெய் போட்டு நன்றாகக் கலக்கவும்.
3. கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும்.
5. சூடானதும் ரிப்பன் பக்கோடா செய்யும் உழக்கில் மாவைப் போட்டு எண்ணெய்யில் பிழியவும்.
6. இரு பக்கமும் நன்றாக வெந்தவுடன் எடுத்து விடவும்.
7. இப்போது சுவையான கம்புமாவு ரிப்பன் பக்கோடா ரெடி!
- ஆர்.பிருந்தா