
தேவையானவை:
வறுத்த சேமியா - 1 (பாக்), வெண்ணெய் – 100 கி, மில்க்கி மெய்டு- ½ கப்,
அலங்கரிக்க: பாதம் மற்றும் முந்திரி
செய்முறை:
மிதமான தீயில் வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் சூடேற்றவேண்டும். பிறகு அதில் வறுத்த சேமியாவை போட்டு 5 நிமிடம் வரை நன்கு கிளறவேண்டும். அதில் மில்க்கி மெய்டை ஊற்றி நன்கு கிளறவேண்டும். ஓரளவு கெட்டியாக வந்த பிறகு இறக்கிடலாம். சூடாக இருக்கும்போதே மருந்து மூடி அல்லது கிண்ணம் எடுத்துக்கொண்டு தயாரித்த சேமியாவை அதில் போட்டு நன்கு அழுத்திவிட்டு, அந்த கிண்ணத்தைக் கவிழ்த்தால் அந்த கிண்ணம் வடிவில் சேமியா வரும். பிறகு பாதம் மற்றும் முந்திரிக் கொண்டு அலங்கரிக்கவும். இப்பொழுது டேஸ்டியான Vermicelli sweet ரெடி.
தேவையானவை:
பாசிப்பயறு - ½ கப், உடைத்த கடலை - 2 டேபிள் ஸ்பூன், பூண்டு - 5 பல், சீரகம் - 1 டேபிள்ஸ்பூன், மிளகு - 1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4 (தூளாக்கவும்), சோடா உப்பு - 1 பின்ச் அளவு,
வேர்கடலை தோல் நீக்கியது - 4 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கு.
செய்முறை: முதலில் ஒரு மிக்ஸியில் உடைத்த கடலை மற்றும் பாசிப்பயறு எடுத்து நன்றாக அரைக்கவேண்டும். அதை சிறு துகள்கள் இல்லாமல் சளித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை கொர கொர வென்று தட்டிக்கொண்டு அந்த மாவோடு தூளாக்கி வைத்த மிளகாயும் அதில் சேர்க்கவேண்டும். பிறகு வேர்கடலை, சோடா உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டு நன்கு கிளற வேண்டும். அந்த மாவில் சூடான எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி பிசைந்துகொள்ளவும்.பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகயில்லாமல் பிசைந்துகொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் பிசைந்து வைத்த மாவை ஒரு உருண்டையாக எடுத்து, மெலிதாக தட்டி எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது சுடான சுவையான ஹெல்தியான பாசிப்பயறு தட்டை ரெடி.
- நிஜாம் பிபி