தினமும் நாம் உணவு உண்ட பின் செய்யும் சில தவறான செயல்கள் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். அவை என்னென்ன என்பதை இப்பதிவில் காணலாம்.
சாப்பிட்டு பின் அதிகமாக தண்ணீர் அருந்தக்கூடாது. உணவு உண்ணும்போதும் இடையே தேவையெனில் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும்.
சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடக்கூடாது
இதனால் வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்ப செய்து விடும். பழங்கள் எளிதில் செரித்துவிடும். உணவுகள் மெதுவாக செரிப்பதால் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சாப்பிடுவதற்கு முன்போ, பின்னரோ ஒரு மணி நேரம் கழித்து பழங்களை சாப்பிடலாம்.
சாப்பிட்ட உடனே குளிக்கக் கூடாது
சாப்பிட்ட உடனே குளிப்பதால் கை,கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிப்பதற்கு தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உள்ள உணவின் செரிமானத்தை க் குறைக்கிறது.
தேநீர் குடிக்கக்கூடாது
தேயிலை அதிகளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகள் உடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கிவிடும். மலச்சிக்கல், செரியாமையை தந்து விடும்.
இடுப்பு நாடா, பெல்ட்டை தளர்த்தக் கூடாது
சாப்பிட்டவுடன் இறுக்கமாக இருக்கிறது என இடுப்பு பெல்ட்டை தளர்த்துவதால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விடுவதால் சரியானபடி வேலை செய்யமுடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.
சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லக்கூடாது
சாப்பிட்ட உடனே தூங்கச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிக்காமல் வயிற்றில் தேவையில்லாத வாயுவையும், கிருமிகள் உருவாவதையும் உண்டாக்கிவிடும். சாப்பிட்ட உணவு நெஞ்செரிச்சலைத் தரும்.தூக்கத்தை கெடுத்து சோர்வை தந்து விடும்.
புகை பிடிக்கக் கூடாது
உணவு உண்ட பின் புகைத்தால் செரிமானம் நன்றாக இருக்கும் என நினைப்பர். இவ்வாறு உணவுக்கு பிறகு புகைப்பதால் பல தீங்குகளை தந்து விடும். ஒரு சிகரெட் பிடிப்பது நூறு சிகரெட் பிடிக்கும் அளவுக்கு உண்டான கெடுதலை தந்து விடும். புற்றுநோய் வரும் ஆபத்தையும் அதிகரிக்கும்.
நடக்க கூடாது
சாப்பிட்ட பிறகு நடக்கலாம். இரவு நல்ல தூக்கம் வரும் என்பது தவறான தகவல். இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துக்களை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போகும். உணவின் சத்துக்கள் சரியான முறையில் உடலில் சேராது.
ஐஸ் வாட்டர் அருந்தக் கூடாது
சில்லென்ற தண்ணீர் அருந்துவதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். வயிற்றுவலி, ஜீரணக் கோளாறுகளை தந்துவிடும். வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவதால் செரிமானக் பிரச்னைகள் வராது.
இதுபோன்ற செயல்களை தவிர்த்திட உண்ட உணவின் பலன் முழுமையாக கிடைக்கும்.