
தமிழர்களின் உணவு முறையே சற்று மாறுபட்டது. அதற்கு காரணம் “உணவே மருந்து மருந்தே உணவு” எனும் முறைதான். மேலும் அறுசுவை உணவுகளை ஒரே நேரத்தில் தமிழர்கள் உண்ணும் முறையை பின்பற்றுகின்றனர். உணவே மருந்து என்ற ஒப்பற்ற பழக்கம் ஏற்பட்டதற்கு நம் சங்க இலக்கியங்களே சான்று. இதைப் பற்றி எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கலித்தொகை போன்ற நூல்களிலும், குறிப்பிடப் பட்டுள்ளன. பண்டைய தமிழர்கள், அவர்கள் வாழ்ந்த நிலத்திற்கு ஏற்ப உணவு முறைகளை அமைத்துள்ளனர்.
குறிஞ்சி மக்கள்: இவர்களின் உணவு கிழங்கு வகைகள், மலையில் விளையும் காய்கறிகள், சில இறைச்சி வகைகள், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவற்றை உண்டுள்ளனர். தேனும்,கிழங்கும் அடிக்கடி உண்பார்கள்.
முல்லை மக்கள்: இவர்கள் காட்டு விலங்கின் இறைச்சிகள், காட்டு காய்கறிகள், சில நெல் வகைகள், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை உண்டு வந்துள்ளனர். காட்டு பன்றிகளை அடிக்கடி கொளுத்தி விட்டு நேரடி நெருப்பில் இறைச்சியை சமைத்தனர்.
மருத மக்கள்: இவர்கள் நெல் வகைகள், மரக்கறி வகைகள், ஊறுகாய், பயறு வகைகள் போன்றவற்றை உண்டு வந்துள்ளனர். காய்கறிகள் அவர்களின் தட்டில் ஆதிக்கம் செலுத்தியது. இருப் பினும் இறைச்சி, வெள்ளை அரிசி, கீரை, பருப்பு வகைகள், மற்றும் தானியங் களையும் சாப்பிட்டனர். நண்டு சதை, மற்றும் சுரைக்காய், ஆகியவற்றை அடர்த்தியான கறியுடன் சாப்பிட்டு வந்தனர்.
நெய்தல், பாலை நில மக்கள்: தீயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை விரும்புகின்றனர். ஊறுகாய் பெரும்பாலும் வெயிலில் காயவைக்கப்பட்டு மாதக்கணக்கில் பாதுகாக்கப்படும். டெல்டா பகுதியில் நெல் அறுவடையின்போது, விளாங்கு, தேளி, நண்டு போன்ற மீன்கள் மிகவும் பிரபலமாக இருந்தன.
உணவு வகைகளில் கடுகு இட்டு காய்கறிகளை தாளிப்பது, பசு வெண்ணெயில் பொரிப்பது போன்றவை பண்டைய காலத்திலேயே கடைபிடிக்கப்பட்டது.
பலாவிதைகள், பச்சை மாங்காய்கள், மற்றும் புளிச் சாறுகள் ஆகியவற்றால் ஆன குழம்பு, புதிய நுரைத்த மோர் மற்றும் மூங்கில் அரிசி ஆகியவை தமிழ் இலக்கியங் களில் பதிவு செய்யப்பட்ட நீண்ட காலமாக இழந்த சில சமையல் குறிப்புகள் ஆகும்.
தரையில் சம்மணம் போட்டு வரிசையாக அமர்ந்து உண்ணுவதை தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். குடும்பத்தில் முதலில் வயதானவர்கள், குழந்தை களுக்கும் உணவு பரிமாறி விட்டு, அடுத்து இளைய தலைமுறை சிறுவர்களுக்கு, பரிமாறி கடைசியாக வீட்டு பெண்கள் உணவு உண்பார்கள். முந்தைய காலத்தில் எல்லோர் வீட்டிலும் வாழை மரங்கள் இருந்தன. அவ்வாறு வாழையிலை உணவு உண்ண பயன்படுத்த துவங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாழை இலையில் சூடான உணவு போட்டு சாப்பிடுகையில் குளோரோஃபில் உணவுடன் கலந்து உடலுக்கு ஊட்டச்சத்தை தருகிறது. இலையின் நடுவில் உள்ள கோட்டிற்கு ஒரு பக்கம் காய்கறி உணவுகளையும், முன்பக்கம் சாதமும் என பிரித்து பரிமாறப்படும்.
வாழையிலையில் சாப்பிடும் எல்லோருக்கும் சாப்பிடும் முன் ஒரு நொடி குழப்பம் வரும். இலையை எப்படி போடுவது என்று? இலையின் நுனிப்பகுதி சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக போட வேண்டும். ஏனெனில் நாம் சாப்பிடும்போது வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவைப்படுகிறது.
உப்பு, ஊறுகாய், இனிப்பு எல்லாம் அதிகம் சாப்பிடக் கூடாது. எனவே அதை குறுகலான பக்கம் வைக்க வேண்டும். காய்கறி, சாதம் நிறைய சாப்பிடலாம் என்பதால் இலையின் வலது பக்கத்தில் பரிமாறப்படும்.
இதை தவிர உணவு பழக்கத்தில் பல நிலைகளை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர். அவை ஒவ்வொன்றும் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு கடை பிடிக்கப்படுகிறது.