அப்பளக் குழம்பு
தேவையானது;
பொரித்த அப்பளம் - 5
புளி - எலுமி பூண்ச்சை அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்.
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
உப்பு - தேவைக்கு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் சிறிது கறிவேப்பிலை தாளித்து
நறுக்கிய வெங்காயம், பூண்டு பல், சேர்த்து வதக்கி பொன்னிறமாக வதக்கி, அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சாம்பார்தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கி உப்பு சேர்த்து புளி கரைத்த நீரை ஊற்றி மூடி வைக்கவும்.
குழம்பு கெட்டியானவுடன் அப்பளத்தை சிறு துண்டுகளாக போட்டு பிரட்டி எடுத்து மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான அப்பளக் குழம்பு தயார்.
சட்டென குழம்பு செய்யலாம் முள்ளங்கி பொரியல்
தேவையானது;
முள்ளங்கி - 2
கடுகு - 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது
செய்முறை;
முள்ளங்கியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய முள்ளங்கி சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்தவுடன் சாம்பார் பொடியைப் போட்டு வதக்கவும். அடிப்பிடிக்காமல் எண்ணெய்விட்டு கிளறிக்கொண்டு வரவும். நன்றாக வெந்தவுடன் இறக்கவும். சத்தான முள்ளங்கி பொரியல் ரெடி. குழம்பு, ரசத்துடன் தொட்டு சாப்பிட ருசி அள்ளும்.