வெண்டைக்காய் வடை
வெண்டைக்காய் வடைImage credit - youtube.com

‘மொறு மொறுன்னு’ வெண்டைக்காய் வடை செய்வது எப்படி தெரியுமா?

ரொம்ப ஈஸி… நமக்கு சுலபமாக கிடைக்க கூடிய காய்கறியான வெண்டைகாயில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இது ஜீரணத்திற்கு அதிகம் உதவுகிறது. வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயம் ஆரோக்கியமடையும், உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்தகைய வெண்டைக்காயில் வடை எப்படி சுலபமாக செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய வெண்டைக்காய்-1கப்.

பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1கப்.

கடலை மாவு-1 கப்.

அரிசி மாவு-1/2 கப்.

சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய்-1.

கருவேப்பிலை- சிறிதளவு.

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/4 தேக்கரண்டி

மிளகாய் பொடி-1/2 தேக்கரண்டி.

சீரகம்-1/4 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

ஒரு பவுலில் பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் 1 கப் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 கப்  எடுத்துக்கொண்டு அத்துடன் கடலை மாவு 1 கப், அரிசி மாவு ½ கப், கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் ½ தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, சீரகம் ¼ தேக்கரண்டீ சேர்த்து நன்றாக பிசைந்து பின்பு சிறிது தண்ணீர் விட்டு வடை பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

இப்போது அடுப்பில் எண்ணெயைக் காய வைத்துவிட்டு மாவை சிறிது எடுத்து கையில் வைத்து தட்டி நடுவிலே ஓட்டையிட்டு எண்ணெய்யில் போட்டு நன்றாக பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான். இப்போது சுவையான வெண்டைக்காய் வடை தயார். இந்த ரெசிப்பி சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும். வெண்டைக்காய் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து தந்தால் நன்றாக சாப்பிடுவார்கள். தொட்டுக்க வெங்காய சட்னி இருந்தா இன்னும் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com