முடி கருகருன்னு வளரணுமா? இந்த நெல்லிக்காய் லட்டு செஞ்சு சாப்பிடுங்க!

Gooseberry Lattu.
Gooseberry Lattu.

முடி நன்கு அடர்த்தியாக, கருகருவென இருக்க வேண்டும் என்பது நம் அனைவரின் கனவாகவே உள்ளது. ஆனால் இந்தப் பதிவை படித்துப் பிறகு உங்களுடைய கனவு நிஜமாகப் போகிறது. நெல்லிக்காய் நம் தலை முடிக்கு ஆரோக்கியம் கொடுக்கும் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். அதைப் பயன்படுத்திதான் சுவையான ரெசிபி ஒன்று நாம் செய்யப்போகிறோம். 

ஒரு நெல்லிக்காயில் மூன்று ஆப்பிள்களின் சத்துக்கள் அடங்கியுள்ளன. விட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இவை நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். தினசரி நமது உணவில் நெல்லிக்காயை சேர்த்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, அடர்த்தியான கூந்தலையும் பெறலாம். 

நீங்களும் நெல்லிக்காயைப் பயன்படுத்தி ஊறுகாய், ஜூஸ், ஜாம் என பல உணவுகளை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் நெல்லிக்காயை வைத்து லட்டு செய்து சாப்பிட்டதுண்டா? இந்த லட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருகருவென நல்ல அடர்த்தியான கூந்தலைப் பெறலாம். 

தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் லட்டு செய்வதற்கு தரமான பெரிய சைஸ் நெல்லிக்காய்களை எடுத்துக் கொள்ளவும். இனிப்பு சுவைக்காக நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்துங்கள். வெள்ளை சர்க்கரை வேண்டாம்.

செய்முறை: முதலில் நெல்லிக்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு அதை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடங்கள் வரை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு நெல்லிக்காயை நன்றாகத் துருவி அதன் கொட்டைகளை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். 

இப்போது ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் நாட்டு சர்க்கரையை ஒன்றாக சேர்த்து மிதமான சூட்டில் கிளறிக் கொண்டே இருங்கள். மீண்டும் சொல்கிறேன் வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதைத் தவிருங்கள். நெல்லிக்காயும் நாட்டு சர்க்கரையும் ஒன்றாக சேர்ந்து கெட்டியாக வரும் வரை கிளறவும். இதில் பொடியாக நறுக்கிய நட்ஸ் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கலந்து விடுங்கள். 

இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்தது கடாயில் ஒட்டாத பாதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து விடவும். இதை சிறிது நேரம் ஆறவிட்டு கை பொறுக்கும் சூட்டுக்கு வந்த பிறகு சிறு சிறு லட்டுகளாக பிடிக்கத் தொடங்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டினால், நெய் மனமும் சேர்ந்து சுவை மேலும் நன்றாக இருக்கும். 

தயார் செய்த நெல்லிக்காய் காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைத்து தினசரி சாப்பிட்டு வந்தால், உங்களுடைய முடி பிரச்சனைகளுக்கு டாட்டா பாய் பாய் சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com