Dosai recipe...
Dosai recipe...

தோசை வார்க்கும்போது சுண்டி விடுகிறதா… எப்படி சரி பண்ணுவது? இதோ சில டிப்ஸ்!

தோசை வார்க்கும்போது சில சமயங்களில் கல்லில் ஒட்டிக் கொள்ளும். இதை தவிர்க்க கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெயுடன் அரை ஸ்பூன் உப்பு போட்டு கலந்து தேய்த்து விட்டு பிறகு வார்த்தால் நன்றாக வரும்.

தோசைக்கல்லில் தோசை நன்றாக எடுக்க வராவிட்டால் வாழை இலையால் தோசை கல்லை நன்றாக துடைக்க வேண்டும் பின்பு தோசை மாவு விட்டால் பதமாகவும் நன்றாகவும் வரும்.

தோசைக்கல் சூடானதும் பொடியாக வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலையை அதில் தூவி பின் அதன் மேல் மாவை ஊற்றி வட்டமாக மாற்றி விடுங்கள் இப்போது ஊத்தப்பமோ, அடையோ மெல்லிசாக இருப்பதுடன் வெங்காயமும் மாவுக்குள்ளே பரவி நன்கு வெந்தும் இருக்கும்.

கரைத்த தோசைக்கு தண்ணீருக்கு பதில் புளித்த மோரை கலந்து வார்த்தால் சுவையாக இருப்பதோடு நல்ல பிரவுன் கலரில் இருக்கும்.

தோசைக்கு ஊறவைக்கும் அரிசியுடன் ஒரு டீஸ்பூன் சோயாவும், உளுந்துடன் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து மாவு அரைத்தால் நல்ல சத்தான ருசியான தோசை சாப்பிடலாம்.

கோதுமை மாவை கரைத்து தோசை வார்க்கும் முன் மாவில் சிறிது எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு வெங்காயம் ,,கருவேப்பிலை, சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மாவில் கலக்கினால் கோதுமை தோசை அருமையாக இருக்கும்

ரவா தோசை ஹோட்டலில் கிடைப்பதுபோல் மொறு மொறுவென இருக்க வேண்டுமா ரவை மைதாமாவு ஆகியவற்றை சரி விகிதத்தில் கலந்து மிளகு, சீரகம் பெருங்காயம், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வார்த்து எடுங்கள்   மொறுமொறுவென கிடைக்கும்.

எந்த தோசை முறுகலாக வேண்டுமானாலும் தோசைக்கு அரிசி உளுந்து ஊற வைக்கும்போது சிறிது வெந்தயம் சேர்த்து  அரைத்தால் தோசை கிடைக்கும்.

தோசைக்கு அரைத்த மாவில் 50 கிராம் கொத்துக் கடலையும் 50 கிராம் பட்டாணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து எடுத்து தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்தால் மொறுமொறுவென்று இருப்பதோடு சத்தும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆண்களுக்கான 7 டை வகைகள்!
Dosai recipe...

தோசைக்கு அரைக்கும்போது அரிசியுடன் கைப்பிடி அளவு துவரம் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் தோசை வாசனையாகவும் முறுகலாகவும் இருக்கும்.

புழுங்கல் அரிசியுடன் தக்காளி பழம் சேர்த்து அரைத்து தோசை வார்த்தால் டேஸ்டாக இருக்கும்.

சம அளவு கோதுமை மாவு மைதா மாவுடன் கொஞ்சமாக கடலை மாவு சேர்த்து கரைத்து சிறிது நேரம் வைத்திருந்து மிளகு ஓமம் இரண்டையும் தேவையான காரத்திற்கு ஏற்ப எடுத்து லேசாக வறுத்து ஒன்று இரண்டாக தூள் செய்து அத்துடன் நறுக்கி வதக்கிய பெரிய வெங்காயம் கொஞ்சமாக கடுகு சீரகம் சேர்த்து தாளித்து கரைத்து வைத்த மாவில் கலந்து தோசை போல் வார்த்தால் மிகவும் சுவையுடன் இருக்கும்.

தோசை வார்த்து அதன் மேல் சீஸ் துருவல்கள் கேரட் துருவல்கள் சிறிது சிறிதாக நறுக்கிய தக்காளி வெங்காயம் குடைமிளகாய் தூவி மூடி வைத்து மறுபக்கம் திருப்பாமல் எடுத்து விடுங்கள் பீட்சா தோசை ரெடி குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com