முதுமையை தள்ளிப் போடவும், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவும் அருந்த வேண்டிய பானம்!

Badam...
Badam...

தாமரை விதை ஒரு கப் 

பாதாம் பருப்பு 1/2 கப் 

ஏலக்காய் 15

பேரிச்சம்பழம் 10 துண்டுகள்

கசகசா நான்கு ஸ்பூன் 

சுக்கு ஒரு துண்டு

அடுப்பில் வாணலியை வைத்து மிதமான தீயில் தாமரை விதை, பாதாம் பருப்பு, ஏலக்காய், கசகசா, தட்டிய சுக்கு துண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக தனித்தனியாக போட்டு நன்கு சூடு வர வறுத்தெடுக்கவும்.

மிக்ஸி ஜாரில் முதலில் சுக்கை போட்டு பொடித்து அதில் உள்ள நார்களை நீக்கிவிட்டு தாமரை விதை, பாதாம், ஏலக்காய், கசகசா ஆகியவற்றை சேர்த்து பொடிக்கவும். கடைசியாக கொட்டைகள் நீக்கிய பேரிச்சம் பழதா துண்டுகளை சேர்த்து பொடித்து எடுக்கவும். இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினமும் இரவில் படுக்கப் போகும் சமயம் ஒரு கப் பாலில் ரெண்டு ஸ்பூன் பவுடர் சேர்த்து பனங்கற்கண்டு அல்லது நாட்டு சக்கரை சேர்த்து பருக உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் கிடைப்பதுடன் நரம்பு தளர்ச்சி பிரச்சனையும் குணமாகும்.

தாமரை விதையில்  கால்சியம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளது. புரதம் மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்தது. இது முதுமையை தள்ளிப் போடவும், முடி உதிர்வை தடுக்கவும், மன‌அழுத்தத்தை குறைக்கவும், மூட்டு வலி, கை கால் வலியை போக்கவும், ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கவும் உதவும்.

பாதாம் பருப்புபில் உள்ள விட்டமின் ஈ பார்வை திறனை கூட்டும். எலும்பை வலுவாக்கும். இதில் இரும்பு சத்துடன் விட்டமின் ஈயும் இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து சிவப்பு ரத்த அணுக்களையும் பராமரிக்கிறது.

கசகசா  உடலுக்கு உறுதியையும் சருமத்திற்கு பளபளப்பையும் நல்ல உறக்கத்தையும் கொடுக்கக் கூடியது.

வயிற்றில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் அதலக்காய் பொரியல்!

அதலக்காய் பொரியல்
அதலக்காய் பொரியல்

அதலக்காய் 1/4 கிலோ 

உப்பு தேவையானது

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

சின்ன வெங்காயம்்10  

காய்ந்த மிளகாய் 2

அதலக்காயை வாங்கி மண் போக நன்கு அலம்பி அதன் முன்புறம் உள்ள காம்பையும் பின்புறம் உள்ள சிறுகாம்பையும் கிள்ளி எடுத்து விடவும். 

இப்பொழுது வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாயை கிள்ளி சேர்த்து, கறிவேப்பிலை சிறிது போட்டு நல்லெண்ணெயில் தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு கிளறி விட்டு அதில் அலம்பி வைத்துள்ள அதலகாய்களை சேர்த்து சிறிது நீர் தெளித்து தட்டை போட்டு மூடி வேக விடவும். நன்கு வந்ததும் தேங்காய்த் துருவல் சிறிது சேர்த்து இறக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகவிட ஐந்தே நிமிடத்தில் மிகவும் ருசியான, சத்தான அதலக்காய் பொரியல் தயார்.

சர்க்கரை நோய்க்கும், மஞ்சள் காமாலைக்கும் சிறந்த காய் இது. இக்காய் வயிற்றில் இருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, குடற்புழுக்களையும் வெளியேற்றும் தன்மை கொண்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com