இந்த போண்டா செய்வதற்கு அரைக்க வேண்டாம் கரைக்க வேண்டாம். இன்ஸ்டன்டாக செய்துவிடலாம். சுவையும் அசத்தலாக இருக்கும்.
இன்ஸ்டன்ட் இனிப்பு போண்டா:
மைதா ஒரு கப்
பச்சரிசி மாவு 2 ஸ்பூன்
சர்க்கரை 1/2 கப்
பால் 1/4 கப்
உப்பு ஒரு சிட்டிகை
ஏலக்காய் 3
சமையல் சோடா 1/4 ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க
சர்க்கரை, ஏலக்காய் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் அரிசி மாவு, ஒரு சிமிட்டு உப்பு, பால் சேர்த்து பொடித்து வைத்த சர்க்கரை, ஏலக்காயை சேர்த்து, கால் ஸ்பூன் சமையல் சோடாவையும் போட்டுத் தேவையான அளவு தண்ணீர் விட்டு வடை மாவு பதத்திற்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சின்னச் சின்ன உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க சுவையான இனிப்பு போண்டா தயார்.
கார போண்டா:
மைதா மாவு ஒரு கப்
அரிசி மாவு 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
இஞ்சி ஒரு துண்டு
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை சிறிது
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
புளித்த தயிர் 1/2 கப்
எண்ணெய் பொரிக்க
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, அதற்குத் தேவையான உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சிறிது, பெருங்காயத்தூள் போட்டு புளித்த தயிர் ஒரு 1/2 கப் விட்டு தேவையான அளவு நீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் போண்டாக்களாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க மிகவும் ருசியான கார போண்டா தயார்.