
நவீன காலத்தில் பலரின் வீடுகளில் கேஸ் அடுப்பு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விறகு அடுப்பில் இருந்து நாடு வளர்ந்து வளர்ந்து தற்போது எலெக்ட்ரிக் அடுப்பு என்று வரை உயர்ந்துள்ளது. இப்படி இருக்கையில் அதிகமானோர் கேஸ் அடுப்பு தான் பயன்படுத்துகின்றனர்.
தற்போது வித விதமாக கேஸ் அடுப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. 2 பர்னர் முதல் 5 பர்னர் வரை உள்ள அடுப்புகள் டிசைன் டிசைனாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தங்களின் வசதிக்கேற்ப ஒவ்வொரு நபர்களும் கேஸ் அடுப்பு வாங்கி கொள்கின்றனர். ஸ்டீல், கண்ணாடி என்ற வகையிலும் அடுப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.
எவ்வளவுக்கு எவ்வளவு நமது வேலையை கேஸ் அடுப்பு மிச்சம் செய்தாலும், அழுக்காக இருப்பதால் அதை மெயிண்டைன் செய்வது அவ்வளவு எளிதல்ல. சிறிதாக பால் சிந்தினாலும், சமைக்கும் எண்ணெய் தெரித்தாலும் கூட அடுப்பு உடனே அழுக்காக மாறிவிடும்.
இது நாளடைவில் எண்ணெய் பிசுக்காக மாறி ஒட்டி கொண்டே இருக்கும். நீங்கள் சோப்பு போட்டு ஊறவைத்து தேய்த்து காயவைத்தால் மட்டுமே அழுக்கு போகும். ஆனால் சில டிப்ஸை பின்பற்றுவதன் மூலம் அடுப்பை எளிதில் சுத்தம் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
சமையல் உப்பு
பேக்கிங் சோடா
வீட்டில் உள்ள இந்த 2 பொருட்களை வைத்தே அடுப்பை அழகாக சுத்தம் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
1 டேபிள் ஸ்பூன் தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கவும். இப்போது அந்த கலவையை கேஸ் அடுப்பில் ஊற்றி தேய்க்க கரைகள் எளிதில் நீங்கி பளீச் ஆகிவிடும்.
இதே போல் வினிகரையும், தண்ணீரையும் கலந்து சமைத்து முடித்த பிறகு ஒவ்வொரு முறையும் ஸ்ப்ரே செய்து 5 நிமிடத்திற்கு விட்டு விடுங்கள். பிறகு ஒரு துணியை வைத்து துடைத்தாலே போதும் அடுப்பில் எந்த கரையும் இருக்காது. புதிது போல மாறிவிடும்.