ஈஸி & டேஸ்டி ஜவ்வரிசி வெஜிடபிள் கிச்சடி!

ஜவ்வரிசி வெஜிடபிள் கிச்சடி
ஜவ்வரிசி வெஜிடபிள் கிச்சடி

காலை உணவுக்கேற்ற ஜவ்வரிசி கிச்சடி மிகவும் ருசியாகவும், சத்தானதாகவும் இருக்கும். செய்வதும் எளிது. இரவே ஜவ்வரிசியை ஊற வைத்து விட்டால் காலையில் பத்தே நிமிடத்தில் கிச்சடியை அசத்தலாக செய்து விடலாம்.

ஜவ்வரிசி ஒரு கப் (200 கி) 

பீன்ஸ் 10 

கேரட் 1 

குடமிளகாய் பாதி

உப்பு தேவையானது 

கருவேப்பிலை சிறிது 

கொத்தமல்லி சிறிது 

பச்சை மிளகாய் 2

இஞ்சி ஒரு துண்டு

எலுமிச்சம் பழம் 1 மூடி

ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து களைந்து நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,இஞ்சி நறுக்கியது சேர்த்து நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பீன்ஸ் கேரட் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து தேவையான உப்பு போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டை போட்டு மூடி வைக்கவும்.

ஜவ்வரிசி நன்கு வெந்து கண்ணாடி போல் ஆனதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி அடுப்பை அணைத்துவிட்டு ஒரு மூடி எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து பரிமாற மிகவும் ருசியான ஜவ்வரிசி கிச்சடி தயார்.

அதலக்காய் பொரியல்

அதலக்காய் பொரியல்
அதலக்காய் பொரியல்

அதலக்காய் 1/4 கிலோ 

உப்பு தேவையானது

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

சின்ன வெங்காயம்்10  

காய்ந்த மிளகாய் 2

அதலக்காயை வாங்கி மண் போக நன்கு அலம்பி அதன் முன்புறம் உள்ள காம்பையும் பின்புறம் உள்ள சிறுகாம்பையும் கிள்ளி எடுத்து விடவும். 

இதையும் படியுங்கள்:
லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!
ஜவ்வரிசி வெஜிடபிள் கிச்சடி

இப்பொழுது வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாயை கிள்ளி சேர்த்து,கறிவேப்பிலை சிறிது போட்டு நல்லெண்ணெயில் தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு கிளறி விட்டு அதில் அலம்பி வைத்துள்ள அதலகாய்களை சேர்த்து சிறிது நீர் தெளித்து தட்டை போட்டு மூடி வேக விடவும். நன்கு வந்ததும் தேங்காய்த் துருவல் சிறிது சேர்த்து இறக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகவிட ஐந்தே நிமிடத்தில் மிகவும் ருசியான, சத்தான அதலக்காய் பொரியல் தயார்.

சர்க்கரை நோய்க்கும், மஞ்சள் காமாலைக்கும் சிறந்த காய் இது. இக்காய் வயிற்றில் இருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, குடற்புழுக்களையும் வெளியேற்றும் தன்மை கொண்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com