
1. அவல் கட்லெட்
தேவையானவை :
அவல் - ஒரு கப்
வாழைக்காய் (அரை வாழைக்காய் )- வேக வைத்து மசித்தது
புதினா இலை - அரிந்தது கால் கப்
வேர்கடலை வறுத்து கொரகொரப்பாக அரைத்தது - கால் கப்
ப்ரெட் துண்டு - 2
வேக வைத்த கார்ன் விதைகள் - 4 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் அரிந்தது - 2
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கார்ன் மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை எடுத்து விட்டு உதிர்க்கவும். அவலை நன்றாக கழுவி வடிய விடவும். வேர்க்கடலையை வறுத்து கொர கொரப்பாக பொடிக்கும். மேற்கூறிய அனைத்து பொருட்களையும் அவலுடன் சேர்த்து சிறிது நீர் விட்டு பிசையவும்.
கார்ன் மாவு மற்றும் மைதா மாவை சிறிது நீர் கலந்து வைக்கவும். அவலுடன் சேர்த்து வைத்திருந்த கலவையை கட்லெட் வடிவத்திற்குச் செய்து அதை மைதா கார்ன் கலவையில் தோய்த்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் பொரிக்கவும. சுவையான அவல் கட்லெட் தயார். இதை சட்னி அல்லது சாசுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
2. சீஸ் சமோசா :
சீஸ் துருவி அத்துடன் கொத்தமல்லி, ஓரிகானோ, மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த சமோசா தயாரிக்க செட்டார் அல்லது மொசரெல்லா சீஸ் பயன்படுத்தலாம்.
கொத்தமல்லி தழை, வெங்காயம், பெல் பெப்பர், கார்ன் விதைகள், அரிந்த கீரை போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.
பன்னீரையும், சீஸ்ஸையும் துருவித் கொள்ளுங்கள். அதில் கொத்தமல்லித்தழை, சீரகப் பொடி, மசாலா பொடி, அரிந்த பச்சை மிளகாய் , வேகவைத்த கார்ன் விதைகள், சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கவும். பிறகு கோதுமை மாவை பிசைந்து வட்டமாக இட்டு அதை இரண்டாக வெட்டி, சீஸ் கலவையை அதில் வைத்து முனையில் கார்ன் அல்லது மைதா கரைத்த நீரில் தொட்டு மூடி மிதமான எண்ணெயில் போட்டு பொரிக்க சீஸ் சமோசா தயார்.