
கோடை காலம் வந்தாலே குழந்தைகள் வீட்டிலேயே இருப்பார்கள். தினசரி பள்ளியில் ஓடி விளையாடி, படித்து களைப்பதால் நாட்கள் ஓடுவதே தெரியாது. ஆனால் தற்போது விடுமுறை விட்டதால் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பார்கள். இதனால் அவர்களுக்கும் தினசரி போர் அடிக்கும். ஸ்நாக்ஸ் ஏதாவது வேண்டுமென்று கேட்பார்கள். கடைகளில் வாங்கி கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்குமோ என்ற கவலை பல பெற்றோர்களுக்கு வரும். இப்படி ஒரு சூழ்நிலையில், வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து சூப்பர் சுவையில் ஒரு ஸ்வீட் செய்து அசத்தலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
வறுத்த பொட்டுக்கடலை - 1 கப்
வெல்லம் - 2 கப்
தண்ணீர் - 2 கப்
நெய் - 5 ஸ்பூன்
சமையல் எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் தேவையான அளவு பொட்டுக்கடலை எடுத்து வறுக்கவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து துருவிய வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அது சூடானதும் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவை சேர்த்து நன்கு கரைக்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து பாகு பதத்திற்கு கரைத்து அதில் வெல்லம் நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிக்ஸ் செய்யவும். வெல்லம் தண்ணீர் பொட்டுக்கடலை மாவுடன் சேர்த்து அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி விடலாம். பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு ஸ்வீட் வந்ததும் இறக்கி விடலாம். இது உண்மையாகவே மிகவும் சுவையாக இருக்கும். சீயம், கொழுக்கட்டைக்கு எல்லாம் இதை தான் பூரணமாக வைப்பார்கள். அதுவும் முழு ஸ்வீட்டாக சாப்பிடும் போது நிச்சயமாக டேஸ்டாக இருக்கும். குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குறிப்பு: மணத்திற்கு ஏலக்காய் பொடி சேர்த்தால் வாசமாக இருக்கும்.