ஈஸியா செய்யலாம் கேரட் நட்ஸ் ஐஸ்கிரீம்!

கேரட் நட்ஸ் ஐஸ்கிரீம்
கேரட் நட்ஸ் ஐஸ்கிரீம்www.thespruceeats.com

ஸ்கிரீம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீமை கடைகளில் வாங்கி தரும்போது செலவும் அதிகம், அதே சமயம் ஆரோக்கிய கெடும் ஏற்படும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. அதனால் பெரும்பாலும் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதை விரும்புவதில்லை. ஆனால் குழந்தைகளுக்கும் பிடித்த மாதிரி ஆரோக்கியமான சத்தான  ஐஸ்கிரீமை அவ்வப்போது நாம் வீட்டிலேயே செய்யலாம். இதோ வீட்டில் எளிதாக செய்யக்கூடிய கேரட் நட்ஸ் ஐஸ்கிரீம்.

தேவையானவை:
காய்ச்சிய கெட்டிப் பால்  - ஒரு கப்
மீடியம் சைஸ் கேரட் - 3
சர்க்கரை - கால் கப் அல்லது தேவைக்கேற்ப
முந்திரி - 10 பாதாம் பிஸ்தா -  தலா 10 சிறிது சிறிதாக நறுக்கியது அல்லது துருவியது.

செய்முறை:
கேரட்டுகளை நன்கு கழுவி தோலை சீவி விட்டு துருவி மினி ஃபேனில் போட்டு வேகவைக்கவும்.  வெந்த கேரட் நன்கு ஆறியதும்  அதனுடன் சர்க்கரையையும் உடைத்த முந்திரியையும் சேர்த்து மிக்ஸியில் மிக நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்தக்கலவையில்  ஏற்கனவே காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து நன்கு கலந்து அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக் கிளறவும். 

இதையும் படியுங்கள்:
சிரமமின்றி உடல் எடையை குறைக்க சில எளிய ஆலோசனைகள்!
கேரட் நட்ஸ் ஐஸ்கிரீம்

கலவை ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற வைத்து சிறிய கிண்ணங்களை எடுத்து அதில் ஊற்றி மேலே பாதாம் பிஸ்தா துருவலை சேர்க்கவும். இதனை அப்படியே இரண்டு மணி நேரம் குளிர் சாதனப் பெட்டியின் பிரீசரில் வைத்திருந்து அதன்பின் எடுத்து மிக்ஸியில் போட்டு மீண்டும் ஒருமுறை சுற்றி கிண்ணங்களில் நிரப்பி மீண்டும் பிரீசரில் வைக்கலாம். சிலமணி நேரங்களில் ஐஸ்கிரீம் பதம் வந்ததும் எடுத்து பரிமாறலாம். இதில் உள்ள கேரட், பால், நட்ஸ் போன்றவைகளில் உள்ள விட்டமின் ஏ மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்த  ஆரோக்கியமான  ஐஸ்கிரீம் இது என்பதால் தாராளமாக அனைவரும் விரும்பி ருசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com