ஈஸியா செய்யலாம் வீட்டிலேயே மணமணக்கும் சாம்பார் பொடி!

ஈஸியா செய்யலாம் வீட்டிலேயே மணமணக்கும் சாம்பார் பொடி!

நாம என்னதான் சாம்பார் வைத்தாலும் பாட்டி செய்வது போல் இல்லை என நினைக்க்கிறீர்களா? காரணம் வேறொன்றுமில்லை. பாட்டி வீட்டில் செய்த சாம்பார் பொடியையும் நாம் கடையில் வாங்கிய பொடியையும் பயன்படுத்துவதுதான். இதோ உங்களுக்காகவே கமகமக்கும் சாம்பார் பொடி செய்முறை. இதில் உள்ள அளவுகளைக் குறைத்து வீட்டிலும் மிக்சியில் அவ்வப்போது அரைத்து வைக்கலாம்.

சாம்பார் பொடி

வரமிளகாய்  - 1/4 கிலோ,

தனியா (முழு  நாட்டுக்கொத்துமல்லி) - 1/4 கிலோ,

சீரகம் - 100 கிராம்

மிளகு -50 கிராம்

கடலைப்பருப்பு - 25 கிராம்

துவரம்பருப்பு - 25 கிராம்

வெந்தயம் - 25 கிராம்

பெருங்காயம்- 10 கிராம்

பச்சரிசி - கைப்பிடி

செய்முறை:

குண்டு மிளகாய் அல்லது நீள மிளகாய்களை தரமாக வாங்கி நல்ல வெயிலில் 3 மணி நேரம்  காய வைக்கவும்.  அடுப்பில் இரும்பு வாணலியை வைத்து சூடானதும்  மிதமான தீயில்  மீதி பொருள்களை தனித்தனியாக போட்டு லேசாக சூடு படுத்தினாலே போதும். அதிகம் சூட்டில் இருந்தால் கலர் சுவை மாறும். (வறுக்க கூடாது)

மிளகாய் மொறு மொறு என்று காய்ந்ததும் எல்லா பொருள்களையும் ஒன்றாக சேர்த்து மிசினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். கமகமக்கும் சாம்பார் பொடி ரெடி. மிஷினில் தந்து அரைத்து வந்ததும் சிறிது விளக்கெண்ணெய் பிசிறி வைக்கலாம். இதை 4 அல்லது 5 மாதங்கள் வரை உபயோகிக்கலாம். பிரிஜ்ஜில் வைக்கத் தேவை இல்லை.

இதையும் படியுங்கள்:
காலையில் கடைப்பிடிக்க வேண்டிய 20/20/20 Concept!
ஈஸியா செய்யலாம் வீட்டிலேயே மணமணக்கும் சாம்பார் பொடி!

குறிப்பு- பச்சரிசி நைசாக வேண்டும் என்பதற்காக சேர்க்கப்படுவது. தேவை இல்லை எனில் தவிர்க்கலாம். சிலர் பச்சரிசி இருப்பதால் சிறு வண்டு வரும் என்பார்கள். 

என்ன ரெடியா? இனி பாட்டி வீட்டு சாம்பார் நம்ம வீட்டிலும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com