கத்தரிக்காய் சீக்ரெட்: மசாலா குழம்பும் மணக்கும் பிரியாணியும்!

Eggplant recipes
Eggplant Secret recipes
Published on

கத்தரிக்காய் எள் மசாலா குழம்பு

தேவையான பொருட்கள்:

பெரிய கத்தரிக்காய் - 2

மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகத்தூள் - 1டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1டீஸ்பூன்

புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை -ஒரு டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

வறுத்து அரைக்க:

வரமிளகாய் - 4,

எள் - 2 டேபிள் ஸ்பூன்.

பூண்டு - 4 பல்.

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வரமிளகாய்மற்றும் பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு சிறிது நீர்ஊற்றிநன்கு நைசாக அரைக்கவும்.

பின் கத்தரிக்காய் நீரில் கழுவி அதை நீள துண்டுகளாக வெட்டவும்.

பின்பு ஒரு வாணலியில் அடுப்பை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின், அதில் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, மூடிவைத்து பத்து நிமிடம் கத்திரிக்காயை வேகவைக்கவும்.

கத்திரிக்காய் நன்கு வெந்ததும் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி ஐந்து நிமிடம் கழித்து புளிச்சாற்றை ஊற்றி, 5 நிமிடம் மீண்டும் வேகவைத்து இறக்கினால் சுவையான கத்திரிக்காய் எள்ளு மசாலா குழம்பு தயார். இதனைசூடான சாதத்தில் போட்டு பிசைந்து சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிட ருசியாக அருமையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பணியாரம் முதல் லட்டு வரை: கரும்புச் சாறு மேஜிக்!
Eggplant recipes

கத்தரிக்காய் பிரியாணி

தேவையானபொருட்கள்:

கத்தரிக்காய் - 6

பாசுமதி அரிசி - ஒரு கப்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்

சோம்பு -சிறிது

பட்டை - 1, அன்னாசி பூ - 1, கிராம்பு - 2, பிரிஞ்சி இலை - 1

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

தயிர் - 2 டீஸ்பூன்

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி ,புதினா - சிறிது

உப்பு - தேவைக்கு.

செய்முறை:

பாசுமதி அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் , எண்ணெய்ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, அன்னாசி பூ, பிரிஞ்சி இலை போட்டு தாளித்து, பின் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறி, அதில் காம்பு மட்டும் எடுத்து கத்தரிக்காய் பாவாடையுடன் நான்காக கீறி அதையும் சேர்த்து வதக்கிய பின், தயிர் விட்டு, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் 1 1/2 கப் சேர்த்து பாசுமதி அரிசியை போட்டு நன்கு கொதித்த பின் மெதுவாக கிளறவும். அதில் புதினா, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து பின் குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கவும். சுவையான கத்தரிக்காய் பிரியாணி ரெடி. தயிர் பச்சடி தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com