
கேரட் கோலா
தேவையான பொருட்கள்:
கேரட் - கால் கிலோ
தேங்காய் துருவல் - 1 கப்.
பொட்டுக்கடலை - 1/2 கப்.
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 7
மிளகாய்த்தர் - 2 டேபிள் ஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கசகசா, சோம்பு - தலா 1 டீ ஸ்பூன்.
கொத்தமல்லி - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
கேரட்டை தோல் சீவி துருவவும். பொட்டுக்கடலை நைசாக அரைக்கவும். கேரட், தேங்காய் துருவல் இரண்டையும் பிழிந்து எடுக்கவும். கசகசா, சோம்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, சின்ன வெங்காயம்,பூண்டு சேர்த்து அரைக்கவும். பொட்டுக்கடலை மாவுடன் , அரைத்த விழுது, கேரட் துருவல், தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான கேரட் கோலா ரெடி.
நெய் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/4 கிலோ.
பாசிப்பருப்பு - 100 கிராம்.
சர்க்கரை - 1 கப்
வெண்ணெய் - 100 கிராம்.
எண்ணெய் - பொரிக்க
உப்பு - சிட்டிகை.
ஏலத்தூள் - 1 ஸ்பூன்.
செய்முறை:
அரிசியை ஊறவைத்து தண்ணீர் வடித்துவிட்டு உலர்ந்த பின் மிக்ஸியில் நைசாக அரைத்து சலிக்கவும். பாசிப்பருப்பை வாணலியில் இளம் வறுவலாக வறுத்து, குழையாமல் வேகவைக்கவும். வேகவைத்த பருப்புடன், உப்பு சிறிது சேர்த்து நைசாக அரைக்கவும். அரிசிமாவுடன் வெண்ணெய் சேர்த்து கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசையவும்.
அரைத்த பாசிப்பருப்புமாவை சின்னதாக பிடித்து, அரிசி மாவுடன், பாசிப்பருப்பு மாவு உருண்டையை சேர்த்து ஒன்றாக சேர்த்து பிசையவும். பூரணத்துக்கு சர்க்கரையுடன், ஏலக்காய் சேர்த்து நைசாகப் பொடிக்கவும்.
ஒரு தட்டின் பின்புறம் ஈரமான துணியை பிழிந்து விரித்து அதில் நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து வட்டமாக தட்டி அதன் மேல் ஒரு டீஸ்பூன் சர்க்கரை பூரணத்தை வைத்து கொழுக்கட்டைபோல மடித்து மிதமான காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ருசியான நெய் கொழுக்கட்டை ரெடி.