கேதுவுக்கு உகந்தது...

நவக்கிரக சமையல்
கேதுவுக்கு உகந்தது...

துவரம் பருப்பில் துவர்ப்பு சுவை இயல்பாக உள்ளது. உப்பு, உறைப்பாக, காரமாக செய்யும் பண்டங்களால் செவ்வாய் கிரகத்தை திருப்தி படுத்தலாமாம். இது இன்னொரு பஞ்சாங்கத்தின் கூற்று.

குஜவத் கேதுஹு என்னும்படி கேதுவுக்கு உகந்த கொள்ளை மதிய உணவில் உபயோகிக்கலாமா?

கொள்ளு ரசம்:

கொள்ளு – 2 ஸ்பூன், துவரம் பருப்பு – 2 ஸ்பூன், தனியா – அரை ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – ½ ஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்கு, புளி – எலுமிச்சை அளவு, வெல்லம் – சுண்டைக்காய் அளவு, மஞ்சள் பொடி – 1/5 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளியை ½ லிட்டர் தண்ணீரில் கரைத்து மஞ்சள் பொடி, உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். கொள்ளு, துவரம் பருப்பு, மிளகு (தேவையானால் இரண்டு வர மிளகாயும் சேர்த்து) தனியா, சீரகம், கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, நன்கு அரைக்கவும். கொதிக்கும் புளித்தண்ணீரில் கலந்து வேகவிட்டால், நுரையாக பதைத்து வரும். கொதிக்கக் கூடாது. நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயம், தாளித்து அடுப்பை அணைத்து கொள்ளு ரசத்தை மூடி வைக்கவும்.

சாதத்தில் கலந்து நிவேதனம் செய்யவும்.

சொன்னால் சிரிக்காதீர்கள். எத்தனை பேருக்கு வெறும் (துவரம்) பருப்பு சாதம் பிடிக்கும் தெரியுமா?

மராட்டியர் இதை வறண் – பாத் என்று நம்மைப் போலவே முதலில் ஒரு பிடி கலந்து பருப்பு சாதத்துடன்தான் விருந்தே ஆரம்பம் செய்கிறார்கள்!

துவரம் பருப்பை அளவாக நீர் ஊற்றி உடப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கெட்டியாக வேக வைக்கவும். அப்படியே நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து பச்சடி, மோர்க் குழம்பு, காய் இவற்றுடன் சாப்பிடலாம். துவரம் பருப்பு சாதம் மெயின் டிஸ்தான்!

அதற்கு அப்புறம் அவரவர் வேண்டிய நகாசு வேலை செய்துக்கலாம்.

கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கலாம். மாங்காய் துருவி சேர்க்கலாம். எலுமிச்சை பிழியலாம்.

நைவேத்யம் செய்தபின் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி சேர்க்கலாம். இதை கொஞ்சம் நீர்க்க செய்து, சிறிய பனீர் துண்டங்களை வெண்ணையில் பொறித்து சேர்க்கலாம்! சப்பாத்திக்கு பலே ஜோராக இருக்கும்.

ஊற வைத்து வேகவித்த கொண்டைக் கடலை, காராமணி இவற்றை புளி, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க வைத்து, அதில் வெந்த துவரம் பருப்பை சேர்க்க மிக சுவையான சனா பொடிக் குழம்பு ரெடி. சாதம், சப்பாத்தி இரண்டுக்குமே அட்டகாசமாக இருக்கும்.

பருப்பு வடை (ஆம வடை)

ருப்பு வடை என்றாலே கடலை பருப்பும் துவரம் பருப்பும் சேர்த்து ஊற வைத்து உப்பு, மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து அரைத்து செய்யும் வடைதான்.

இதிலே வாழைப்பூ, கீரை, வெங்காயம், இஞ்சி பூண்டு, கரம் மசாலா இதில் ஏதாவது ஒன்றை சேர்த்தால் வித்தியாசமாக இருக்கும்.

கடாயில் எண்ணெயில் வைத்து டீ்ப ப்ரை செய்யப்படும். இவை, அராபிய நாட்டின் ‘பலாபல்’லுக்க நிகரானது.

வடை பாயசம் இல்லாமல் எந்த மதிய விருந்தாவது உண்டா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com