கோடைக்கு இதமாய் நுங்கு பால் பாயசம் செஞ்சி பாருங்க!

நுங்கு பால் பாயசம்
நுங்கு பால் பாயசம்

கோடைக்காலம் வந்து விட்டதால் இளநீர், நுங்கு போன்றவையின் விற்பனை இனி அதிகரிக்க தொடங்கி விடும். நம் சருமத்தையும், உடலையும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள இளநீர், நூங்கு, தர்பூசணி போன்றவற்றை வாங்கி உண்ண தொடங்குவது மிக அவசியமானதாகும்.

எனினும் அதை எப்போதும் போல சாப்பிடுவதை விடுத்து புதுவிதமாக ஏதாவது செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். அதற்காக தான் இன்று நுங்கு பால் பாயசம் எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம்.

நுங்கு பால் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:

நுங்கு- 20.

ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம்-5

ஏலக்காய்-4

பால்-1 லிட்டர்.

ஜீனி-10 தேக்கரண்டி.

கன்டென்ஸ்ட் மில்க்- 2 தேக்கரண்டி.

பொடியாக நறுக்கிய பிஸ்தா, பாதாம்- 5.

நெய்-1 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
அதிகமா தூங்கினாலும் பிரச்சனை தான்.. என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?
நுங்கு பால் பாயசம்

நுங்கு பால் பாயசம் செய்முறை விளக்கம்:

முதலில் மிக்ஸியில்  ஊற வைத்து தோல் நீக்கிய 5 பாதமையும் 4 ஏலக்காயையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இப்போது அதில் 10 நுங்கையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது அதில் 2 கரண்டி சுண்ட காய்ச்சிய பாலை ஊற்றி மறுபடியும் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் சுண்ட காய்ச்சிய பாலை ஊற்றி அதில் 10 தேக்கரண்டி ஜீனி சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது கன்டென்ஸ்ட் மில்க் 2 தேக்கரண்டியை சேர்த்துக்கொள்ளவும். நன்றாக 5 நிமிடம் பாலை கொதிக்க விட்டு அரைத்து வைத்திருக்கும் நுங்கை அதனுடன் சேர்க்கவும். பிறகு நன்றாக கலக்கி விடவும்.

இப்போது மீதம் வைத்திருந்த நுங்கை சிறிது சிறிதாக வெட்டி அதனுடன் சேர்க்கவும். அதில் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவை சேர்க்கவும். இப்போது பாயாசத்தின் மீது நெய் 1 தேக்கரண்டியை ஊற்றவும். பாயசம் ஆறியதும் கிளேஸில் ஊற்றி பறிமாறவும். இப்போது சுவையான நுங்கு பால் பாயசம் ரெடி.

வெறும் நுங்காக சாப்பிட்டு போர் அடித்திருந்தால், இப்படி வித்தியாசமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com