மணக்கும் மசாலா பாத் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி செய்யலாம் வாங்க!

மசாலா பாத்...
மசாலா பாத்...youtube.com

சாலா பாத் மிகவும் பிரபலமான மஹாராஸ்டிர உணவு வகையாகும். இந்த உணவை கல்யாண விருந்தில் அதிகம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலையிலே டிபன் பாக்ஸ் ரெசிபியாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். மசாலா மற்றும் காய்கறிகளை சேர்த்து செய்வதால் சுவையாகவும், சத்து மிகுந்ததாகவும் இருக்கும்.

மசாலா பாத் செய்ய தேவையான பொருட்கள்:

நெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1/2 தேக்கரண்டி

ஜீரகம்-1/2 தேக்கரண்டி

பிரிஞ்சி இலை-2

பொடியாக நறுக்கிய வெங்காயம்-1

பொடியாக நறுக்கிய தக்காளி-1

இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-2

வெட்டி வைத்த உருளை-1

வெட்டி வைத்த கத்தரி-1

பட்டாணி-1 கப்

கோவைக்காய்-1 கப்

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி

உப்பு-1 தேக்கரண்டி

மசாலா பாத் பொடி-2 தேக்கரண்டி.

பச்சரிசி- 1 டம்ளர்

தண்ணீர்- 2 டம்ளர்.

நெய் -2 தேக்கரண்டி.

மசாலா பாத் பொடி செய்முறை:

கிராம் 1, ஏலக்காய் 1, தனியா 1தேக்கரண்டி, ஜீரகம் 1 தேக்கரண்டி, மிளகாய் 2, முந்திரி 4, துருவிய தேங்காய் 2 தேக்கரண்டி ஆகியவையை காடாயில் சற்று வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.

மசாலா பாத் செய்முறை விளக்கம்:

முதலில் கடாயில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கடுகு ½ தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி, பிரிஞ்சி இலை 2 சேர்த்து தாளிக்கவும். பிறகு ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, 2 பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, வெட்டி வைத்த தக்காளி 1 சேர்த்து வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
வடு மாங்காய் ஊறுதுங்கோ தயிர் சாதம் சாப்பிடுங்கோ! – (வடு மாங்காய் ரெசிபீஸ்)
மசாலா பாத்...

கோவக்காய் 1 கப், கத்திரிகாய் 1, பட்டானி 1 கப், உருளை 1 எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போ இதோடு 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு 1 தேக்கண்டி, மசாலா பாத் பவுடர் சேர்த்து 2 தேக்கரண்டி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

இப்போது 1/4 மணி நேரம் ஊற வைத்த ஒரு டம்ளர் பச்சரிசியை அத்துடன் சேர்த்து கொள்ளவும். அரிசியை நன்றாக மசாலாவுடன் ஒருமுறை பிரட்டி கொண்டு  2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அத்துடன் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி மூடி 15 நிமிடம் நன்றாக வேக வைக்கவும். இப்போ ‘கமகம’ மசாலா பாத் தயார். அதன் மீது கொத்தமல்லி இலை சிறிதும், துருவிய தேங்காயையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு பின்பு பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com