பலன் தரும் பூசணிக்காய் துவையல்!

பலன் தரும் பூசணிக்காய் துவையல்!

பாகற்காய் தேங்காய்ப்பால் கறி

செய்முறை: பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, விதை நீக்கி உப்புத் தண்ணீரில் ஊற விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெங்காயம் தாளித்து, தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, பாகற்காய் சேர்த்து வேக விடவும். வெந்ததும் தேங்காய்ப்பால் விடவும். கடைசியாக தயிர் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவவும்.

உடம்புக்கு நல்லது இந்த பாகற்காய் தேங்காய்ப்பால் கறி!

தேவை: பாகற்காய் - 200 கிராம், தேங்காய்ப்பால் - 1 கப், வெங்காயம் - 1, பச்சை மிளகாய், தக்காளி - தலா 2, மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன், கடுகு, மல்லித்தூள் - தலா 1/2  டீஸ்பூன், தேங்காய்எண்ணெய், தயிர் தலா - 2 டேபிள் ஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி - தேவைக்கு.

டயட் துவையல்

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு பூசணிக்காய் துண்டுகளைத் தனியாக வதக்கி வைக்கவும். கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். ஆறியதும் இவற்றுடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

இளைக்க விரும்புபவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும் இந்த பூசணிக்காய் துவையல்.

தேவை: நறுக்கிய பூசணிக்காய் - 2 கப், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4 - 6, தேங்காய், புளி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கு.

தக்காளி ஸ்வீட் கார்ன் ரைஸ்!

செய்முறை: எண்ணெய் காய்ந்ததும் பொடி செய்த இலவங்கப் பட்டை, ஏலக்காயைத் தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர் ஸ்வீட் கார்ன், மிளகாய்த் தூள், கரம் மசலாத் தூள், தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும்.  வேக வைத்த சாதத்தைக் கொட்டிக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவவும்.

தேவையானால் முந்திரியால் அலங்கரிக்கலாம். ஸ்வீட் கார்ன் வித்தியாசமான ருசியைத் தரும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

தேவை: பாசுமதி அரிசி - 250 கிராம் (வேக வைத்தது), தக்காளி - 150 கிராம் (நறுக்கியது), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது), ஸ்வீட் கார்ன் - 100 கிராம், பச்சை மிளகாய், ஏலக்காய், இலவங்கப் பட்டை - தலா 3, எண்ணெய் (அ) நெய் - 2 குழிக் கரண்டி, மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு, இஞ்சிப் பூண்டு விழுது, கொத்தமல்லி  - தேவைக்கு.

அவரைக்காய் பெப்பர் ஃப்ரை

செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய்  விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். அதில் அவரைக்காயைப் போட்டு வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு மேலும் வதக்கவும். அவரைக்காய் வெந்ததும் மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

சளி, ஜலதோஷத்தின்போது சாப்பிடத் தோதானது இந்த ஃப்ரை!

தேவை: அவரைக்காய் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது), மிளகுத்தூள், தேங்காய் எண்ணெய்  - தலா 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 2 சிட்டிகை, கடுகு, உப்பு - தேவைக்கு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com