
பொதுவாகவே பூண்டு குழம்பின் சுவை சாதாரணமாக வைக்கும் காரக் குழம்பை விட நன்றாக இருக்கும். ஆனால் பெரும்பாலும் பூண்டு குழம்பில் பூண்டை முழுதாக போட்டுதான் செய்வார்கள். ஆனால் ஒருமுறை பூண்டை அரைத்து இந்த குழம்பு செய்து பாருங்கள். செம ருசியாக இருக்கும். மூன்று நாட்கள் வரை கெடாமலும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பூண்டு - 15
எண்ணெய் - தேவையான அளவு
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - ½ ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 3
தக்காளி - 3
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
புளி கரைசல் - 50 ml
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, வெந்தயம் சீரகம் பூண்டு, மிளகு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இவை நன்றாக வதங்கியதும் அத்துடன் தக்காளி சேர்த்து மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம் சேர்த்து, அதிலும் கொஞ்சம் கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை நிறம் மாறியதும், அரைத்து வைத்துள்ள விழுதை இதில் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்க வேண்டும்.
அடுத்ததாக இதில் புளி கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குழம்பை கொதிக்க வைத்து இறக்கினால் செம டேஸ்டியான அரைத்த பூண்டு குழம்பு தயார்.
இது சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். இட்லி, தோசை போன்றவற்றிற்கும் ஒரு நல்ல காம்பினேஷனாக அமையும்.