
பொதுவாக, பீட்சா மற்றும் ரோஸ்ட் செய்த உணவுப் பொருட்கள் மீது, கூடுதல் சுவைக்காக பூண்டுப் பவுடர் தூவி உண்பது வழக்கம். ஃபிரஷ் பூண்டுப் பற்களை உலர்த்தி, அரைத்தெடுக்கும் பூண்டுப் பவுடரில், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் எலும்புகளை வலுவாக்கவும், தசைகளின் இயக்கத்தை சிறந்த முறையில் பராமரிக்கவும், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாய் வைத்திருக்கவும் உதவிபுரிகின்றன.
பூண்டுப் பவுடரில் உள்ள செலினியம் என்ற கனிமச் சத்து, தைராய்ட் ஹார்மோன்களின் உற்பத்தியை சம
நிலைப்படுத்தி, இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஆஸ்த்மா நோயின் தீவிரத்தை குறைக்கவும் உதவி புரிகிறது. உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவு குறையும்போது, ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸானது செல்கள் மற்றும் DNA க்களில் சிதைவை உண்டுபண்ணும். செலினியம் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி செல் சிதைவைத் தடுக்க உதவிபுரியும். உடலில் செலினியம் குறையும்போது புற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டா கிறது.
ஃபிரஷ் பூண்டில் இருப்பது போலவே பூண்டுப் பவுடரில், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் C உள்ளிட்ட பல வைட்டமின் சத்துக்கள் உள்ளன. வைட்டமின் C மற்றும் B6 இரண்டுமே உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையாமல் பாதுகாக்க உதவுகின்றன. வைட்டமின் B6 மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவி புரிகிறது. ஆனால் ஃபிரஷ் பூண்டில் இருக்கும் சத்துக்களின் அளவில் ஒரு பகுதியையே பூண்டுப் பவுடர் கொண்டிருக்கிறது.
ஃபிரஷ் பூண்டிலிருந்து கிடைக்கும் அனைத்து நன்மைகளும் பூண்டுப் பவுடரில் கிடைக்காது. எனினும் குறிப்பிடத்தக்க அளவில் சோடியம் பூண்டுப் பவுடரில் உள்ளது. இது பூண்டுப் பவுடரின் வாழ்நாளை நான்கு வருடங்கள்வரை கூட நிலைத்திருக்க உதவுகிறது. மேலும், அல்லிசின் என்றொரு இராசாயனப் பொருளும்
பூண்டுப் பவுடரில் உள்ளது. இது ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல் புரிந்து நோய்கள் வருவதைத் தடுக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இரத்த நாளங்களை தளர்வுறச் செய்து, இரத்த அழுத்தத்தை சமநிலைப் படுத்தவும் செய்கிறது பூண்டுப் பவுடர்.
பூண்டுப் பவுடரிலிருந்து அதன் சுவை மற்றும் முழு பலன்களையும்பெற, அதனுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து உபயோகிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஒரு ஃபிரஷ் பூண்டுப் பல்லிலிருந்து கிடைக்கும் சத்துக்கள், ஒரு டீஸ்பூனின் ⅛ பங்கு பவுடரிலிருந்து
கிடைத்துவிடுகிறது. ஆர்கானிக் சல்ஃபர் (அல்லிசின்) என்ற இரசாயனக் கூட்டுப்பொருளிலிருந்து பூண்டு அதன் கடுமையான வாசனை மற்றும் பலவகையான சத்துக்களையும் பெறுகிறது.