சப்புக் கொட்ட வைக்கும் பாட்டி வீட்டு மோர் குழம்பு!

மோர் குழம்பு
மோர் குழம்புImage credit - youtube.com
Published on

ல்யாண சமையல் ஆகட்டும் வீட்டில் விருந்தினர்கள் வந்திருக்கும் சமயம் ஆகட்டும் மோர் குழம்பு வைத்து பரிமாறுவது என்றால் ஒரு ஸ்பெஷல்தான். ஏனெனில் மோர் குழம்பின்  ருசி அப்படி. ஆனால் இன்றும் கூட சிலர் மோர் குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்ற குழப்பத்தில்  முயற்சி செய்யாமலே  இருக்கிறார்கள். மோரை கொதிக்க வைப்பதா, என்ன பருப்பு சேர்ப்பது, காய்களை எப்படி சேர்ப்பது போன்ற சந்தேகங்கள் வரும். இவர்களுக்காக மோர் குழம்பு ரெசிபி செய்முறையும் சில குறிப்புகளும். தயக்கமே இல்லாமல் செய்து அசத்துங்கள்.

தேவை
புளிக்காத கெட்டித் தயிரில் கடைந்தெடுத்த கெட்டி மோர் - ஒரு கப் கடலைப்பருப்பு அல்லது துவரம் பருப்பு- 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
துருவிய தேங்காய் -  ஒரு ஸ்பூன் வெந்தயம் -கால் டீஸ்பூன்
சாப்பாட்டு புழுங்கல் அரிசி - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்-  கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க- கடுகு உளுந்து
கறிவேப்பிலை- ஒரு கொத்து
மல்லித்தழை - சிறிது

செய்முறை;

துவரம் பருப்பு, அரிசி வெந்தயம் இவற்றை நீரில் நன்கு கழுவி தேங்காய் துருவல், பெருங்காயம், மிளகாய் சேர்த்து அரைத்து மோரில் கலக்கில் உப்பு மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்  ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையுடன் மிளகாய் வற்றல் கிள்ளிப்போட்டு  தாளித்து மோரை ஊற்றி நுரை கூடி வரும்போது இறக்கி மல்லித்தழை தூவி பரிமாறலாம்.
அல்லது மோரை அடுப்பில் கொதிக்க வேண்டிய வைக்காமல் எண்ணெயில் கடுகைத் தாளித்து கலவையைக் கலந்து வைத்திருக்கும் மோரில் ஊற்றியும்  உபயோகிக்கலாம்.

குறிப்புகள்

துவரம் பருப்பு, அரிசி ஆகியவற்றை சிறிது வறுத்து கொரகோரப்பாக அரைத்து அந்த கலவையும் மோரில் சேர்க்கலாம் மணமாக இருக்கும்.

இந்த மோர் குழம்புடன் உப்பு சேர்த்து  தனியே வறுத்து வேகவைத்த வெண்டைக்காய், கத்தரிக்காய், வேகவைத்த பூசணிக்காய் ஆகியவற்றையும் சேர்க்கலாம். சின்ன வெங்காயத்தை இரண்டாகக் கீறி வதக்கியும் போடலாம்.

நார் எடுத்து சுத்தம் செய்த பொடியாக வெட்டிய வாழைத்தண்டு,  கீரைத்தண்டு இலைகளையும் உப்பு சேர்த்து வேக வைத்து மோர் குழம்பில் சேர்க்கலாம்.

உருளைக்கிழங்கு. கருணைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை தனியாக வேகவைத்து தோலை உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கி போட்டால் அருமையாக இருக்கும்.

காய்கறிகள் வீட்டிலே இல்லை எனும் பட்சத்தில் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு (ஏதேனும் ஒன்று) சேர்த்து ஊறவைத்து மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து நைசாக ஆட்டி சிறு சிறு உருண்டைகளாக  காய்ந்த எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுத்து தாளித்து வைத்திருக்கும் மோர் குழம்பில் போட்டால் கூடுதலாக மோர் குழம்பு உள்ளே போகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com