அருமையான Evening Snacks! மங்களூர் பனானா பன்னும் கார சட்னியும்!

பனானா பன்...
பனானா பன்...youtube.com

மங்களூரில் இந்த பனானா பன் மிகவும் பிரபலம். செய்வது மிகவும் சுலபம்.

வாழைப்பழம் 2

சர்க்கரை 3 ஸ்பூன்

உப்பு கால் ஸ்பூன் 

சமையல் சோடா அரை ஸ்பூன் 

கோதுமை மாவு (அ) மைதா மாவு 1 கப்

எந்த வாழைப்பழம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். கனிந்ததாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அத்துடன் சர்க்கரை, உப்பு, சமையல் சோடா சேர்த்து நன்கு அடித்து மசிக்கவும். அதில் கோதுமை மாவை சேர்த்து சிறிது நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பிசைந்து பத்து நிமிடம் ஊற விடவும். பிறகு சப்பாத்தி கட்டையால் சிறிது தடிமனான பூரிகளாக செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. மிகவும் ருசியான மாலை நேர ஸ்நாக்ஸ் தயார். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கும், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற ஸ்நாக்ஸ் இது.

காரச் சட்னி:

 பச்சை மிளகாய் 6 

உப்பு தேவையானது 

பூண்டு 2 பற்கள் 

புளி சிறிது

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், சிறிது புளி, பூண்டு மூன்றையும் போட்டு வதக்கி எடுத்து சிறிது ஆறியதும் சரியான அளவில் உப்பு சேர்த்து அரைத்து நல்லெண்ணையில் சிறிது கடுகு தாளிக்க மிகவும் காரசாரமான சட்னி தயார். இதனை இந்த மங்களூர் பனானா பன்னுடன் சேர்த்து சாப்பிட ருசி கூடுதலாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com