நிலக்கடலை அல்வா ….!

நிலக்கடலை அல்வா ….!

அல்வா பிடிக்காதவர்கள் யாராவது உண்டா? உண்பதற்கு பாதாம் அல்வாவினை போலவே இருக்கும் இந்த அல்வாவினை அதிக செலவில்லாமல் செய்து விடலாம். இந்த அல்வா சுவையிலும் அள்ளும், செய்வதும் மிக எளிது.

தேவையான பொருட்கள் :

வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை 200 கிராம்

ஏலக்காய் 5

காய்ச்சி ஆறவைத்த பால் 400 மிலி

பொடித்த வெல்லம் 200 கிராம் அல்லது வெள்ளை சர்க்கரை

பாதாம் 5

முந்திரி 5

பிஸ்தா 5

நெய் தேவையான அளவு

செய்முறை :

மிக்ஸியில் லேசாக வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை 200 கிராம், 5 ஏலக்காய் சேர்த்து நைசாக பவுடராக அரைக்கவும்.

நன்கு பவுடர் ஆனதும் அப்படியே இதோடு 400 மிலி பாலை மிக்ஸியில் ஊற்றி , பாலும் பவுடரும் நன்றாக மிக்ஸ் ஆகும்படி அரைக்கவும்.

அடிப்புறம் கனமான ஒரு கடாயில் இதை கலவையினை ஊற்றி அடுப்பை மிதமாக எரியவிட்டு நிறுத்தாமல் 5 நிமிடங்கள் கிளறவும்.

மாவு கெட்டியாகி பால்கோவா போல திரண்டதும் இதில் 200 கிராம் பொடித்த வெல்லத்தை அல்லது வெள்ளை சர்க்கரையை சேர்க்கவும்.

இனிப்பு நன்கு கரையும் வரை இதை நன்றாக கிளறி 5 பாதாம், 5 முந்திரி, பிஸ்தாக்களை பொடித்து இதில் சேர்த்து 3 ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் நன்கு கிளறிவிடவும்.

இதனை கையை விடாமல் நிறுத்தாமல் மேலும் இரண்டரை நிமிடங்கள் கிளறினால் பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வரும்.

அச்சமயம் அடுப்பிலிருந்து இதை இறக்கி லேசாக ஆறவிட்டு ஒரு கிண்ணத்தில் நெய் தடவி அல்வாவை நிரப்பி தட்டில் கவிழ்த்தால் அழகாக இருக்கும்.

மேலே தோல் நீக்கி நன்கு வறுத்து பொடித்த நிலக்கடலை தூள்களை அதன் மேல் தூவவும்.

இது சுவையில் பாதாம் அல்வாவை போலவே அசத்தலாக இருக்கும்.

சூடான மிக மிக ருசியான நிலக்கடலை அல்வா ரெடி…! இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது பண்டிகை மற்றும் விழா காலங்களில் செய்ய ஏற்ற எளிய வகை இனிப்பு வகை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com