குஜராத்தி காந்த்வி மிகவும் பிரபலமான குஜராத்தி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். இது மிகவும் சுவை மிகுந்த ஸ்நாக்ஸ் . இது எளிதில் எல்லாருக்கும் பிடிக்கக் கூடிய ஸ்நாக்ஸ் . இது பார்ப்பதற்கு அழகாகவும் மிருதுவாகவும் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு சைடிஸ் ஆக புதினா கொத்தமல்லி சட்னி அல்லது Tomoto கெட்ச் அப் சுவையாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் உங்கள் மாலை நேர தேநீர் வேளைக்கு அருமையானது.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு 1 கப்
சற்றே புளித்த தயிர் 1 கப்
தண்ணீர் 1.5 கப்
பச்சை மிளகாய் விழுது 1/2 ஸ்பூன்
பெருங்காயம் 1 பின்ச்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
உப்பு 1/2 ஸ்பூன்
2 அல்லது 3 பெரிய தட்டுகள்.
தாளிக்க :
எண்ணெய்
கடுகு,
வெள்ளை எள்ளு
பெருங்காயத்தூள்,
கறிவேப்பிலை
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்
அலங்கரிக்க :
தேங்காய் துருவல்
கொத்தமல்லி தழை.
செய்முறை:
மேலே கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக தோசை மாவு போல கரைத்துக்கொள்ளவும்.
பெரிய தட்டுகளின் பின்புறம் எண்ணெய் தடவி பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் கலந்து வைத்துள்ள கரைசலை கொட்டி அடுப்பில் வைத்து கிளறவும்.
அதிக நேரம் பிடிக்காமல் உடனேயே கெட்டியாகி பந்து போல வர ஆரம்பிக்கும்.
இப்போது அடுப்பை நிறுத்தி விட்டு,எண்ணெய் தடவி வைத்துள்ள தட்டுகளில் முடிந்த அளவு மெல்லியதாக கிளறிய மாவை பரப்பவும்.
எல்லா மாவையும் உடனுக்குடன் எல்லா தட்டுகளிலும் பரப்ப வேண்டும்.
இப்போது மாவில் கத்தியால் மெல்லியதாக கோடு போட்டு துண்டு போடவும்.
துண்டின் ஒரு முனையிலிருந்து சுருட்டிக் கொண்டே வந்து ஒவ்வொன்றாக அடுக்கவும்.
தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கண்டவியின் மேல் கொட்டவும்.
மேலே தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை தாராளமாக தூவி அலங்கரிக்கவும்.