குஜராத் ஸ்பெஷல் ஸ்ரீகண்ட் !

shri kandh
shri kandh

தேவையான பொருட்கள்:

  • கெட்டி தயிர் 250ml

  • சர்க்கரை 1/4 கப்

  • பாதாம் மற்றும் முந்திரி தலா 10

  • உப்பு சேர்க்காத பிஸ்தா 6-8 நம்பர்ஸ்

  • ஏலக்காய் 2

  • ஜாதிக்காய் பூ 2 இழைகள்.

செய்முறை:

இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே,தயிரை ஒரு மெல்லிய துணி கொண்டு மூட்டை கட்டி வடிகட்டவும்.

பாதாம்,முந்திரி,ஏலக்காய் மற்றும் ஜாதிபத்ரியை ஒன்றிரண்டாக(வாயில் தட்டு படும் அளவிற்கு) பொடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய தயிருடன் சர்க்கரையை நன்றாக கலந்து கொள்ளும்வரை ஒரு கரண்டியால் அடித்துக் கொள்ளவும்.

பின்னர் பொடி செய்து வைத்துள்ள முந்திரி பாதாம் பொடியை சேர்த்து கலந்து கொள்ளவும்.

பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி பிரிட்ஜ் இல் வைக்கவும்.

தேவைப்படும்போது ஜில்லென்று பரிமாறவும்.

shri kandh
shri kandhPicasa

குறிப்புகள் :

ஜாதிபத்ரி இல்லை எனில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி சேர்க்கலாம்

கோடை காலத்தில் மாம்பழம் கூட சேர்க்கலாம்.

ஏலக்காய் மற்றும் பிஸ்தா, பாதாம் மற்றும் குங்குமப்பூ என்று வித விதமான flavors கூட செய்யலாம்..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com