கோடைக்கு குளு குளுன்னு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் வாங்க!

Butter Scotch Ice Cream
Butter Scotch Ice CreamImage credit - youtube.com
Published on

டிக்குற வெயிலுக்கு தினமும் ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதற்காக தினமும் ஜூஸையே குடிக்காமல் ஒரு சேஞ்க்கு பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம். அதோடு சேர்த்து சிறுவயதில் கடைகளில் வாங்கிக் குடித்த ப்ரூட்டி மேங்கோ ஜூஸையும் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சக்கரை-1 ½ கப்

வெண்ணெய்-2 தேக்கரண்டி.

முந்திரி-1 கைப்பிடி.

வைப்டு கிரீம்-50 கிராம்.

கன்டென்ஸ்ட் மில்க்- 50 கிராம்.

மஞ்சள் நிற புட் கலர்- ஒரு சிட்டிகை.

 செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து அதில் 1 ½ கப் அளவு சக்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது சர்க்கரை நன்றாக உருகியதும் அதில் 2 தேக்கரண்டி வெண்ணெயை சேர்த்தி, பின் அதில் கையளவு முந்திரியை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். இப்போது இந்த கலவையை பட்டர் பேப்பரில் ஊற்றி அது ஆறியதும் சிறிதாக உடைத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் Whipped cream 50 கிராம் எடுத்து நன்றாக கலக்கவும். அதில் கன்டென்ஸ்ட் மில்க் 50 கிராம் சேர்க்கவும். இத்துடன் மஞ்சள் நிற புட் கலர் சிறிது சேர்த்து நன்றாக கலக்கி விடவும். இத்துடன் ஏற்கனவே உடைத்து வைத்திருக்கும் கேரமல்லை சேர்த்துவிட்டு கலக்கவும். இப்போது இந்த கலவையை 8 மணி நேரம் பிரீஸரில் வைத்து எடுத்தால் சுவையான பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் இந்த கோடைக்கு குளுகுளுன்னு தயார். நீங்களும் வீட்டில் செய்து பார்த்துட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்க.

என்னது? வீட்டிலேயே ஃப்ரூட்டி ஜூஸா..?

மாம்பழ ஃபிளேவரில் வரும் இந்த ஃப்ரூட்டி ஜூஸை சிறு வயதில் கடையில் நிறைய வாங்கி குடித்திருப்போம். ஆனால் இப்போது இதன் விலை சற்று அதிகமாகிவிட்டது. அதனால் இந்த கோடைக்கு ஃப்ரூட்டி ஜூஸை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Mango juice...
Mango juice...Image credit - pixabay.com

தேவையான பொருட்கள்:

மாம்பழம்-3

சக்கரை-1 கப்.

தண்ணீர்- தேவையான அளவு.

ஐஸ்கட்டிகள்- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பாத்திரத்தில் கனிந்த மாம்பழம் 3 எடுத்து தோலை சீவி எடுத்துவிட்டு அதை சிறிதாக வெட்டி பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது இதில் 1 கப் சக்கரையை சேர்த்து விட்டு அதனோடு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் 5 நிமிடம் வைத்து கிண்டவும். இப்போது இந்த கலவையை அப்படியே மிக்ஸிக்கு மாற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த ஜுஸை நன்றாக வடிகட்டி விட்டு அத்துடன் 1 கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும்.

இப்போது ஒரு கண்ணாடி கிளாசில் தேவையான அளவு ஐஸ்கட்டி சேர்த்துவிட்டு அதில் ஃப்ரூட்டி மேங்கோ ஜூஸை சேர்த்து பரிமாறவும். இந்த வெயிலுக்கு குளுகுளுன்னு சிம்பிளாக வீட்டிலேயே ஃப்ரூட்டி ஜூஸை செய்து பருகலாம். நீங்களும் இதை வீட்டில் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com