குளுகுளு உளுந்து குலோப்ஜாமூன் - பேஷ் பேஷ் மல்பூரி!

variety snacks...
variety snacks...

பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்ததும் ரெடிமேட் ஆக ஏதாவது ஒரு ஸ்வீட் கேட்பார்கள். கடையில் வாங்கி தருவதை விட இதுபோன்ற சிம்பிளாக வீட்டில் செய்யக் கூடிய ஸ்வீட் வகைகளை முயற்சித்துப் பார்க்கலாமே. நிச்சயம் பிள்ளைகள் உங்களை பாராட்டுவார்கள்.

உளுந்து குலோப் ஜாமுன்:

தேவை:
உளுத்தம் பருப்பு - 1 சிறிய டம்ளர்
சக்கரை - 2 சிறிய டம்ளர்
பச்சரிசி - ஒரு கைப்பிடி
தண்ணீர் -தேவையான அளவு
ரீபைண்ட் ஆயில் - பொறிக்கப் தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்த பச்சரிசியுடன் நீர் வடித்து ஊறவைக்கவும். நன்கு மொட்டுபோல ஊறிய உளுத்தம் பருப்பை வடைக்கு ஆட்டுவதுபோல் நன்கு பொசுபொசுவென்று வரும் வரை சிறிது தண்ணீர் தொட்டு ஆட்டி எடுத்து  ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளலாம்.

சர்க்கரையை சிறிது தண்ணீருடன் கலந்து சற்று பிசுக்கு பக்குவம் வரும் வரை வைத்து சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும். கலர் வேண்டுமானாலும் சர்க்கரையில் கலந்து கொள்ளலாம்.

அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும்  மிதமான தீயில் வைத்து ஆட்டி எடுத்த மாவை கைகளால் எடுத்து குலோப் ஜாமுன் வடிவத்தில் போட்டு எடுத்து ஏற்கனவே எடுத்து வைத்த சர்க்கரைப்பாகில் போடவும். சர்க்கரைப்பாகில் குங்குமப்பூ அல்லது ஏலக்காய்த்தூள்  ஒரு சிட்டிகை போட்டால் மணமாக இருக்கும் . சர்க்கரை பாகில் மிதக்கும் உளுத்து  ஜாமுன் அப்படியே எடுத்து கிண்ணங்களில் வைத்து குழந்தைகளுக்கு தரலாம்.
மேலே முந்திரி துருவி போடலாம். உளுத்தம்பருப்பு ஆட்டும் போது நீர் அதிகம் தெளிக்கக்கூடாது. கவனமாக இருக்கவேண்டும்.

மல்பூரி:

தேவை:
மைதா மாவு - இரண்டு கப்
அரிசி மாவு - கால் கப்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
தயிர் -ஒரு கப்
சர்க்கரை - ரெண்டே கால் கப்
கேசரி பவுடர் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
‘பொய்மான் கரடு’ எங்கிருக்கிறது தெரியுமா?
variety snacks...

செய்முறை:

இரண்டு மாவுகளையும் கலந்து தயிர் சேர்த்து சிட்டிகை சோடா உப்பு சேர்த்து சிறிது கெட்டியாக தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்துக் கிளறி பாகுபதமாக தயாரித்து வைத்துக் கொள்ளவும்.

அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி ஊற்றி வெந்ததும் திருப்பிவிட்டு எடுத்து உடனே சர்க்கரைப்பாகில் போட்டு ஊறியதும் எடுத்து தனியே வைக்கவும். இது குழந்தைகள் விரும்பும் சூப்பர் டிஷ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com