குருபூர்ணிமா ஸ்பெஷல் கடா பிரசாதம் மற்றும் மோர் களி செய்யலாம் வாங்க!

கடா பிரசாதம்...
கடா பிரசாதம்...Image credit - youtube.cim
Published on

குருத்வாரா மற்றும் குருபூர்ணிமா போன்ற விஷேசங்களில் செய்யப்படும் பிரசாதம்தான் கடா பிரசாதம் ஆகும். இதை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

கடா பிரசாதம் செய்ய தேவைவ்வான பொருட்கள்:

சர்க்கரை-1/2கப்.

தண்ணீர்- 1கப்.

நெய்-1/2 கப்.

கோதுமை மாவு- ½ கப்.

கடா பிரசாதம் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பாத்திரத்தில் ½ கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிண்டிவிட்டு சர்க்கரையை கரைத்துக் கொள்ளவும்.

இப்போது இன்னொரு ஃபேனில் ½ கப் நெய் சேர்த்து அத்துடன் ½ கப் கோதுமைமாவு சேர்த்து நன்றாக கிளறிவிடவும். நன்றாக நிறம் மாறி வாசனை வரும்போது, அப்போது செய்து வைத்திருக்கும் சர்க்கரை தண்ணீரை இதில் சேர்த்து நன்றாக கிண்டவும். அப்படியே கலந்து விட்டுக்கொண்டே வந்தால் ஃபேனில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும். அவ்வளவுதான். சுவையான கடா பிரசாதம் தயார். நீங்களும் வீட்டிலே இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

மோர் களி செய்ய தேவையான பொருட்கள்;

தயிர்-1கப்.

தண்ணீர்-1கப்.

உப்பு- தேவையான அளவு.

அரிசிமாவு-1கப்.

நல்லெண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1தேக்கரண்டி.

உளுந்து-1தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

மோர்மிளகாய்-8.

பெருங்காயத்தூள்-1தேக்கரண்டி.

தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட் - வடை மோர் குழம்பு செய்யலாம் வாங்க!
கடா பிரசாதம்...

மோர் களி செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கெட்டியான தயிர் சேர்த்து அதில் 1கப் தண்ணீர் வீட்டு மோர் ஆக்கிக்கொள்ளவும். இப்போது அதில் தேவையான அளவு உப்பு, அரிசி மாவு 1கப் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளவும்.

இப்போது ஃபேனில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு அதில் கடுகு 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி உளுந்து, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து பொரிய விட்ட பிறகு மோர் மிளகாய் 8 சேர்த்து வறுத்துவிட்டு பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு கரைத்து வைத்திருக்கும் மோரை சேர்த்து தேங்காய் எண்ணெய் விட்டு கலந்துவிட்டுக் கொண்டே வரவும். அப்போ அப்போ கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு ஃபேனில் ஒட்டாமல் வரவரை கிண்டி இறக்கவும்.

இதை ஒரு பாத்திரத்தில் வைத்து ஆறவிட்டு சின்ன துண்டுகளாக வெட்டி பரிமாறலாம். அவ்வளவுதான். சுவையான ஸ்நாக்ஸ் மோர் களி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com