ஏகப்பட்ட நன்மைகளைத் தரும் ப்ளூ டீ.. செய்முறை மற்றும் பலன்கள்!

Blue tea
Blue tea

க்ரீன் டீ என்றால் அனைவருக்கும்  நன்றாகவே தெரியும். ஆனால் இப்போது நாம் பார்க்கப்போகும் இந்த ப்ளூ டீ பலருக்கும் தெரியாது. நீல நிற சங்குப் பூ பயன்படுத்திச் செய்யும் இந்த ப்ளூ டீயில் ஆன்டி கிளைகோஜன் இருப்பதால், நாம் இளமையாக இருக்க உதவுகிறது. அந்த வகையில் இதன் செய்முறை மற்றும் பலன்களைப் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • சங்குப் பூக்கள் ( பட்டாம்பூச்சி பட்டாணி பூக்கள்) – 1 முதல் 2 தேக்கரண்டி (தேநீர்க் கடைகளிலும் ஆன்லைனிலும் கிடைக்கும்).

  • 1 கப் நீர்.

  • தேன் அல்லது எலுமிச்சை (விருப்பம் இருந்தால்).

செய்முறை:

முதலில் ஒரு கப் அளவு தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். இன்னொரு புறம் உலர்ந்த சங்குப் பூக்களை தேநீர் பாத்திரத்திலோ அல்லது வெப்பம் உள்ளே செல்லாத பாத்திரத்திலோ வைக்க வேண்டும். 

இப்போது அந்த பூக்களில் வெந்நீரை ஊற்றி ஒரு 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டினால், ஆரோக்கியம் தரும் Blue Tea தயார்.

விருப்பம் உள்ளவர்கள் தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துக் குடிக்கலாம். தேன் அல்லது எலுமிச்சை சேர்த்தால் ப்ளூ டீ சிவப்பு நிற டீயாக மாறவும் வாய்ப்புள்ளது.

இதன் ஆரோக்கிய நன்மைகள்:

1.  இந்த சங்குப்பூ டீ கொழுப்பைக் கரைக்கும் என்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு ப்ளூ டீ எடுத்துக்கொள்ளலாம். ஒரே மாதத்தில் இரண்டு கிலோ எடை குறைந்துவிடும்.

2.  இது முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி இளமையாக வைத்துக்கொள்ளவும், புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவும்.

3.  இந்த ப்ளூ டீயில் உள்ள அந்தோசியனின் உச்சந்தலையில் உள்ள ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுவதால் முடிகளுக்கும் புத்துயிர் கொடுக்கும். முடி நரைத்தல், உதிர்தல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த டீயை தினமும் பருகலாம்.

இதையும் படியுங்கள்:
மொறு மொறு பொரி உருண்டை செய்யலாம் வாங்க!
Blue tea

4. மேலும் இந்த டீ மூளையையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது என்பதால், மன அழுத்தம் ஏற்படாமலும், மனதை எப்போதும் ரிலாக்ஸாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

5. அதேபோல் இது பாராசிட்டாமல் மாத்திரைசெயல்பட்டு சளி, இருமல், வீக்கம், உடல் வலி, காய்ச்சல் போன்றவை குணமாகவும் உதவிசெய்கிறது.

6.  கோடைக்காலங்களில் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலிலுள்ள நச்சுகள் வெளியேறி செரிமானத்திற்கு உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com