ஜல்ஜீரா பானம்: செய்முறை மற்றும் ஆரோக்கிய நன்மைகள்!

Jaljeera
Jaljeera
Published on

நமக்கு ஏராளமான பானங்களும் அதன் மகத்துவமும் தெரியும். ஆனால், இந்த ஜல்ஜீரா பானம் பற்றித் தெரியுமா? இதன் செய்முறை மற்றும் நன்மைகளையும் பார்ப்போம்.

வட இந்தியர்கள் அதிகம் விரும்பி குடிக்கும் இந்த ஜல்ஜீரா பானம் பல்வேறு நன்மைகளைக் கொண்டது. இந்த ஆரோக்கிய பானத்தை செய்ய உதவும் இதன் பொடி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால், நோய் எளிதில் உங்களிடம் வராது.

ஜல்ஜீரா பானம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்,

  • சுக்கு பொடி - 1 ஸ்பூன்,

  • வறுத்த சீரகம் - 6 ஸ்பூன்,

  • கருப்பு மிளகு - 2 ஸ்பூன்,

  • கருப்பு ஏலக்காய் - 4

  • சிட்ரிக் அமிலம் - 2 ஸ்பூன்,

  • பெருங்காயம் - கால் ஸ்பூன்,

  • கருப்பு இந்துப்பு - 2 ஸ்பூன்,

  • உப்பு - 1 ஸ்பூன்,

செய்முறை:

இந்த அனைத்துப் பொருட்களையும் ஈரமில்லாத மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் சிறிது நேரம் அதனை ஆர வைத்துவிட்டு கண்ணாடி பாட்டில் ஒன்றில் கொட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் பொடியை, சாதாரண நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ கலந்து குடித்துவரலாம்.

இதன் ஆரோக்கிய பயன்கள்:

1.  இந்தப் பொடியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

2.  கர்ப்பிணி பெண்கள் இந்த பானத்தை குடித்து வந்தால், மயக்கம் குமட்டல் குறையும். கர்ப்பக்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

3.  இந்த பானத்தில் இரும்புச்சத்து உள்ளதால், தினமும் குடிப்பவர்களுக்கு, ஹீமோகுளோபின் லெவல் அதிகரிக்கும். இதனால், ரத்த சோகை நீங்கும்.

4.  கடுமையான உடல் சூட்டைத் தணித்து உடலைக் குளிர்ச்சியாக மாற்றும் தன்மை ஜல்ஜீராவிற்கு உண்டு. அதனால உடல் உஷ்ணத்தால் அவதிப்படுகிறவர்கள் இந்த ஜல்ஜீரா பானத்தைக் குடிப்பது நல்லது.

5.  மாதவிடாய் நேரங்களில் இதனைக் குடித்து வந்தால், வயிற்று வலி குறைந்து, ரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோக்கள்… ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!
Jaljeera

6.  அஜீரணக் கோளாறினால் உண்டாகிற வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை ஆகியவற்றைச் சரிசெய்ய இந்த ஜல்ஜீரா ஜூஸ் உதவுகிறது.

7.  இதில் கலோரிகள் மிக மிகக் குறைவு. அதனால் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் தினமும் இதைக் குடித்து வர உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட இந்த பானத்தை தினமும் காலை குடித்துவந்தால், உங்கள் உடலில் பல ஆரோக்கிய மாற்றங்களை காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com