Aloe Vera Halwa Kalki Online Recipe

ஆரோக்கியமான Aloe Vera அல்வா - அவல் கேசரி செய்யலாமா?

Published on

ன்றைக்கு வித்தியாசமான ரெசிபிஸ்தான் பார்க்கப் போறோம். ஆரோக்கியமான Aloe vera அல்வா மற்றும் அட்டகாசமான அவல் கேசரி எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யறதுன்னு பார்ப்போம்.

Aloe vera அல்வா செய்ய தேவையான பொருட்கள்.

கற்றாழை-2

நெய்-1 குழிக்கரண்டி.

முந்திரி-10

சோளமாவு-2 தேக்கரண்டி.

சர்க்கரை-1கப்.

Aloe vera அல்வா செய்முறை விளக்கம்.

கற்றாழையை இரண்டு எடுத்து தோல் சீவி நன்றாக தண்ணீரில் போட்டு அலசிவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். Aloe vera உடைய பச்சை வாசம் போனதும் அதில் இரண்டு தேக்கரண்டி சோளமாவை சிறிது தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கலக்கி ஊற்றிக் கொள்ளவும். இப்போது நன்றாக கலந்துவிட்டு கொண்டேயிருந்தால் அல்வா கட்டியாக தொடங்கும். இப்போது இதில் 1 கப் சர்க்கரை, 10 முந்திரி, 1 குழிக்கரண்டி நெய்  சேர்த்து நன்றாக கிண்டி இறக்கினால் கண்ணாடி பதத்தில் Aloe vera அல்வா தயார். இந்த ரெசிபியை கண்டிப்பாக வீட்டில் ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

அவல் கேசரி செய்ய தேவையான பொருட்கள்.

நெய்-1 குழிக்கரண்டி.

முந்திரி-10

திராட்சை-10

அவல்-2 கப்.

தண்ணீர்-3 கப்.

வெல்லம்-1கப்.

உப்பு-1 சிட்டிகை.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
மதுரை ஸ்பெஷல் உருளைக்கிழங்கு பொட்டலம்- கத்தரிக்காய் பொடிக்கறி செய்யலாம் வாங்க!
Aloe Vera Halwa Kalki Online Recipe

அவல் கேசரி செய்முறை விளக்கம்.

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து அதில் 1 குழிக்கரண்டி நெய் விட்டு 10 முந்திரி, 10 திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதே ஃபேனில் கெட்டி அவல் 2 கப் சேர்த்து வறுத்து எடுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் ஏலக்காய்தூள் 1 தேக்கரண்டி, 1 சிட்டிகை உப்பு, அரைத்து வைத்த அவலை சேர்த்து நன்றாக வெந்ததும் வெல்லம் 1கப் சேர்த்து நன்றாக கிண்டவும். இப்போது இதில் நெய் சிறிது ஊற்றி அத்துடன் வறுத்து வைத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்து இறக்கினால் சூப்பரான சுவையில் அவல் கேசரி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com