

தேவையான பொருட்கள்:
இளம் வாழைத்தண்டு - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 1 சிறியது, இஞ்சி - 1 சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன், புளிக்காத கெட்டித்தயிர் - 1 கப், கடுகு - ¼ டீஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு.
செய்முறை:
வாழைத் தண்டின், நாரை நீக்கிவிட்டு, மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதனைப் பொடியாக நறுக்கி, அரை டீஸ்பூன் உப்பைப் போட்டு, பிசறிப் பிழிந்துத் தனியே வைத்துக்கொள்ளவும்.
தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து விழுதாக்கி அதனுடன், தயிரைக் கலக்கவும். பின் மேற்படி, வாழைத் தண்டை இக்கலவையுடன் சேர்த்து கடுகு தாளித்து, கொத்துமல்லித் தழை போட்டுப் பரிமாறவும்.