ஹெல்த்தி ப்ரேக் ஃபாஸ்ட் டோக்லா!!

டோக்லா...
டோக்லா...  www.youtube.com
Published on

டோக்லா என்பது வடஇந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகையாகும். டோக்லா மிருதுவான சற்று காரமும், இனிப்பும் கொண்ட வேகவைத்த உணவு வகையாகும். இதை காலையில் பரேக் ஃபாஸ்டாகவும் சாப்பிடலாம். டீக்கு ஸ்நாக்ஸாகவும்  எடுத்துக்கொள்ளலாம்.

டோக்லா ஒரு ஆரோக்கியமான உணவாகும். உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் டயட்டில் டோக்லாவையும் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் டோக்லாவில் புரதம், நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

டோக்லா செய்ய தேவையான பொருட்கள்:

கடலைமாவு -1 ½ கப்.

உப்பு- ½ தேக்கரண்டி.

சக்கரை-1/2 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

ஈனோ உப்பு- 5கிராம்.

தண்ணீர்- தேவையான அளவு.

கொத்தமல்லி, துருவிய தேங்காய்- தேவையான அளவு.

எழுமிச்சை-1/2 மூடி.

டோக்லா செய்முறை விளக்கம்:

ரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவு 1 1/2 கப், உப்பு ½  தேக்கரண்டி, சக்கரை ½ தேக்கரண்டி, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டி வராமல் நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். இப்போது கரைத்து வைத்த மாவை சிறிது நேரம் ஊறவிடவும்.

கேக் செய்யும் டின்னில் எண்ணையை தடவிக்கொள்ளவும். இப்போது மாவில் ஈனோ உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு டின்னில் மாவை ஊற்றி எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அதில் ஒரு ஸ்டான்ட் வைத்து கேக் டின்னை அதன் மீது வைத்து மூடி விடவும். இதை 20 நிமிடம் நன்றாக வேக வைக்கவும்.

பிறகு திறந்து டூத்பிக்கை வைத்து குத்தி பார்க்கவும். மாவு ஒட்டாமல் வந்தால் நன்றாக வெந்து விட்டது என்று அர்த்தம். இதை நன்றாக ஆற விடவும்.

இதையும் படியுங்கள்:
இனிக்கும் கரும்பில் இத்தனை ஆரோக்கியமா?
டோக்லா...

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணை சேர்த்து அதில் ½ தேக்கரண்டி கடுகு சேர்த்து வெடிக்க விடவும். அதில் கீறிய 5 பச்சை மிளகாய், கருவேப்பில்லை  சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு அதில் ½ கப் தண்ணீர் ஊற்றி ½ தேக்கரண்டி உப்பு, 2 தேக்கரண்டி சக்கரை சேர்த்து கொத்தமல்லி சிறிது, எழுமிச்சை ½ மூடி சேர்த்து இறக்கவும்.

இப்போது ஆறவைத்த டோக்லாவை எடுத்து சிறிய துண்டுகளாக கட் செய்து அதில் செய்து வைத்திருக்கும் சிரப்பை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும். துருவிய தேங்காய், கொத்தமல்லி அதன் மீது தூவி பரிமாறவும். இப்போது சுவையான ஆரோக்கியமான டோக்லா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com