’இந்த மாதிரி செஞ்சு குடுத்தா, ப்ரக்கோலி வேண்டாம்னு சின்னப் பிள்ளைங்க கூட சொல்ல மாட்டாங்க’’!

ப்ரக்கோலி
ப்ரக்கோலி
Published on

வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ், புரதச்சத்து நிறைந்தது ப்ரக்கோலி. இது  ரத்தம்  உறைந்து போவதைத்   தடுக்கும். இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.  நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது . நிறைய நோய்களில்  இருந்து பாதுகாக்கும் . இது சற்றே கசப்பு சுவையுடன் இருக்கும். அதனால் சிலருக்கு இதன் சுவை பிடிக்காமல் இருக்கும். இதை முறையாக சமைத்து சாப்பிட்டால்  ருசியாக இருக்கும்.

1. சாலட் ;

காய்கறி சாலட் செய்து சாப்பிடலாம்.  நறுக்கிய  தக்காளிகள், முட்டைக்கோஸ், கேரட்,  இவற்றுடன் நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக  நறுக்கப்பட்ட ப்ரக்கோலிகள் சேர்த்து உண்ணலாம். இது நன்றாக பசியைத்  தாங்கும். இதில் இருக்கும் பச்சை வாடை பிடிக்காதவர்கள், ப்ரக்கோலிகளை லேசாக ஆவியில் வேகவைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

 2. சூப்;

குளிர்காலத்தில் பருக ஏற்றது ப்ரக்கோலி சூப். ப்ரக்கோலியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். அதனுடன் பெரிய வெங்காயம் வெள்ளை பூண்டு, சீரகம் போட்டு சூப் தயாரித்து சாப்பிடலாம். கடைசியில் கொத்தமல்லி இலைகளை நறுக்கி போட்டு, புதினா இலைகளையும் தூவினால் அந்த சூப் மிகச் சுவையாக இருக்கும்.

ப்ரக்கோலி பாஸ்தா
ப்ரக்கோலி பாஸ்தா

 3. ப்ரக்கோலி பாஸ்தா;

ப்ரக்கோலியை  சுடுநீரில் இரண்டு நிமிடம் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் . பாஸ்தாவை சுடுநீரில் வேக வைத்து, நீரை வடித்துக் கொள்ளவும் .  ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை , நறுக்கிய வெங்காயம் , தக்காளி , ப்ரக்கோலியை போட்டுக் கிளறி , வெந்த பாஸ்தாவை சேர்த்து , சிறிது கரம் மசாலா, மிளகாய்ப்பொடி , சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் , தேவையான உப்புப் போட்டு கிளறினால் அருமையான ப்ரக்கோலி பாஸ்தா ரெடி.

 4. ப்ரக்கோலி ஸ்மூத்தீஸ்;

ரு ப்ரோக்கோலியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு ஆப்பிளையும்,  ஒரு பெரிய  வாழைப்பழத்தையும்    துண்டுகளாக்கி , ஒரு கப் பால்  சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனுடன் சில க்ரேன் பெர்ரி சேர்த்து  சாப்பிடலாம். மிகுந்த ஆற்றல் தரும். சுவையாக வும் இருக்கும்.

ப்ரக்கோலி ஸ்மூத்தீஸ்
ப்ரக்கோலி ஸ்மூத்தீஸ்

5.  சப்பாத்திக்கு சைட் டிஷ் ;

ரு வாணலியில்,எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, ப்ரக்கோலி, சிறிதளவு மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், போட்டு வதக்கி, நன்றாக வேக வைக்கவும்.  சப்பாத்தி செய்து அதனுடன் இந்த சைட் டிஷ்ஷை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

 6. ப்ரக்கோலி ஆம்லெட்;

முட்டை ஆம்லெட் செய்யும் போது, நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, மல்லித்தழை, இதனுடன் பொடியாக நறுக்கிய ப்ரக்கோலியையும் ஆம்லெட் மேல் தூவி  சாப்பிடலாம். முட்டை பொரியலிலும் கலந்து உண்ணலாம். இது மிகுந்த சுவையான உணவாக இருக்கும் சத்தானதும் கூட.

பிரக்கோலி பொரியல்
பிரக்கோலி பொரியல்

7. ப்ரக்கோலி பொரியல்;

றுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளைப் பூண்டு, துருவிய இஞ்சி, கருவேப்பிலை, அதனுடன் ப்ரக்கோலியையும் போட்டு சிறிது மஞ்சள் தூள் மிளகுத்தூள் போட்டு வேகவைத்து எடுத்து, சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com