பார்வைத் திறனை அதிகரிக்கும் சூப்பர் உணவு: கேரட் கீர் செய்வது எப்படி?

Healthy carrot gheer
Healthy carrot gheer recipes
Published on

ன்றைய இளைஞர்கள் குழந்தைகள் பலர் கண்ணாடி அணிந்துகொண்டு இருப்பதை நாம் பல இடங்களில் பார்க்கலாம். இதற்கு காரணம் அவர்கள் அளவுக்கு அதிகமான தொலைக்காட்சி, தொலைபேசி, கணினி பயன்படுத்துவது ஒரு காரணமாக இருந்தாலும் அவர்கள் போதுமான அளவு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது இல்லை என்பதும் ஒரு முக்கியமான காரணம் ஆகும்.

அப்படிபட்ட உணவுகளை நாம் அன்றாடம் உட்கொள்ளுவதன் மூலம் நாம் இந்த பிரச்சனையை  தவிர்க்கலாம். அதற்காக அன்றாடம் நாம் வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய ஓர் எளிய மற்றும் ஆரோக்கியமான ஒன்று தான் கேரட் கீர்.

கேரட் கீர் செய்யும் முறை:

நான்கு கேரட்  சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதே அளவு தேங்காயைத் துருவி எடுத்து  கொள்ளவும்.

தேவையான அளவு பனங்கற்கண்டு, 500ml பால் சேர்த்து  மிக்ஸியில் இரண்டு நிமிடங்கள் அரைத்தால் ஆரோக்கியமான அருமையான கேரட் கீர் ரெடி.

இதையும் படியுங்கள்:
எடைய குறைக்கனுமா? - அப்போ இந்த சோயா ராகி அடைய மட்டும் சாப்பிடுங்க!
Healthy carrot gheer

திடீரென விருந்தாளிகள் வந்துவிட்டால் ஆரோக்கியமான இந்த கேரட் கீர் செய்து கொடுத்து அசத்தலாம்.

இந்த கேரட் கீர்  நாம் அன்றாடம் காலை உணவிற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அல்லது உடற்பயிற்சி செய்து முடித்து விட்டு ஒரு பத்து நிமிடங்கள் பிறகும் இந்த கேரட்கீர் எடுத்துக் கொள்ளலாம்.

-இரவிசிவன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com