ஆரோக்கியம் தரும் அத்திக்காய் சமையல்!

அத்திக்காய் சமையல்...
அத்திக்காய் சமையல்...

ண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாது. அத்திப்பூ பூப்பதை அதிகமாக பார்க்க முடியாது. அதனால்தான் இந்த பழமொழி உருவானது.

இவை வயிற்று புண்ணுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. 

மலக்குடலை சுத்தம் செய்யவும், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் இதனை சமையலில் பயன்படுத்தலாம். அத்திக்காயில் பூச்சி புழு இருக்கும். எனவே சமைக்கும் முன்பு நன்கு கவனித்து சுத்தம் செய்ய வேண்டும். அத்துடன் அதிலுள்ள விதைப்பகுதியை சுரண்டி எடுத்து விட வேண்டும். 

அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. இதனுடன் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம். பொரியல் செய்யலாம்.
அத்திக்காய் தயிர் பச்சடி:

அத்திக்காயை அலம்பி சுத்தம் செய்து வேகவைத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் 2 கிள்ளிப் போட்டு தாளித்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அதிகம் புளிப்பு இல்லாத தயிர் கலந்து பச்சடி செய்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

அத்திக்காய் கூட்டு:

பிஞ்சு அத்திக்காயாக எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் கடுகு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் இரண்டு கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் அத்திப் பிஞ்சையும் சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேகவிடவும். வெந்த துவரம் பருப்பை அரை கப் சேர்த்து கலந்து விட அத்திக்காய் கூட்டு தயார். அத்திக்காயில் பொரியலும் செய்யலாம்.

மாங்காய் தொக்கு!

கிளி மூக்கு மாங்காய் ஒரு கிலோ 

உப்பு தேவையானது 

மஞ்சள் தூள் 2 ஸ்பூன் 

காரப்பொடி 4 ஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

வெல்லம் 1 துண்டு

அதிகம் புளிப்பில்லாத கிளி மூக்கு மாங்காயை தேர்ந்தெடுத்து நன்கு அலம்பி துடைத்து கேரட் துருவலில் நன்கு துருவிக் கொள்ளவும். வாணலியில் கடுகு, பெருங்காயத்தூள் போட்டு நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன் விட்டு கடுகு பொரிந்ததும் துருவி வைத்துள்ள மாங்காயை சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டைப் போட்டு மூடி இரண்டு நிமிடம் வேகவிடவும். பிறகு திறந்து நன்கு கிளறி காரப்பொடி, வெல்லம் ஒரு துண்டு சுவையை கூட்டுவதற்காக சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். மிகவும்  சுவையான மாங்காய் தொக்கு தயார். இதனை தயிர் சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com