பன்னீர் – சீஸ் ப்ரெட் பக்கோடா!

ப்ரெட் பக்கோடா...
ப்ரெட் பக்கோடா...www.youtube.com

தேவையானவை:

ஃப்ரெஷ் ப்ரெட் – 8 ஸ்லைஸ் (ஓரப் பகுதிகளை நீக்கிக்கொள்ளவும்.),

பன்னீர் ஸ்லைஸ் – 200 கிராம்,

சீஸ் – 100 கிராம்,

கோதுமை மாவு – 1½ கப்,

அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்,

ஓமம் – ½ டீஸ்பூன்,

பச்சை மிளகாய் சட்னி – 2 டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் -1 டீஸ்பூன்,

சாட் மசாலா 1 டீஸ்பூன்,

உப்பு – தேவையானது,

தண்ணீர் – தேவையானது,

ரீஃபைண்ட் ஆயில் – 300 மி.லி., ஃப்ரெஷ் கொத்தமல்லி இலை பொடியாக அரிந்தது – 1 கப் அலங்கரிக்க.

செய்முறை:

முதலில் சிறிது வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு; அரிசி மாவு, ஓமம், மிளகாய்த் தூள், சாட் மசாலா; தேவையான உப்பு போட்டு, சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவுபோல கரைத்து வைத்துக்கொள்ளவும். பன்னீர் மற்றும் சீஸை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு ப்ரெட்டை எடுத்துக்கொண்டு, அதன் மீது பச்சை மிளகாய் சட்னியை, பரவலாகத் தடவி, பின்னர் சீஸ் துண்டுகளை வைக்கவும். மற்றொரு ப்ரெட்டை எடுத்து அதன்மீது மூடினாற்போல வைத்து, லேசாக அழுத்தியபின் இரு பகுதிகளாகவோ அல்லது நான்கு பகுதிகளாகவோ கட் செய்யவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பின்மீது வைக்கவும். காய்ந்ததும் ரெடியாக கட் செய்து வைத்திருக்கும் ப்ரெட் துண்டுகளை தயாரித்து வைத்திருக்கும் பஜ்ஜி மாவிற்குள் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு இருபுறமும் திருப்பிக்கொடுத்து பொன்னிறமானதும் வெளியே எடுக்கவும்.

கொத்தமல்லி இலைகளை அதன்மீது அலங்காரமாகத் தூவி, சாப்பிடக் கொடுத்தால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும். தேவைப்பட்டால், தக்காளி கெட்ச்அப்பைத் தொட்டுக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com