
குதிரைவாலி நீர் உருண்டை
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி-1கப்
தேங்காய்த் துருவல்- மூன்று டேபிள் ஸ்பூன்
கடுகு- ஒரு டீஸ்பூன்
உளுந்து, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு தலா -ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய்- இரண்டு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்- 3 நறுக்கியது
நறுக்கிய பெரிய வெங்காயம்- ஒன்று
மல்லித்தழை ,கறிவேப்பிலை நறுக்கியது- கைப்பிடி அளவு
உப்பு -தேவைக்கு ஏற்ப
செய்முறை:
குதிரைவாலி அரிசியை சாதமாக வேகவைத்து உதிராக வடித்து ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய்விட்டு கடுகு ,உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு தாளித்து பச்சை மிளகாய், பொடியாக அரிந்த வெங்காயம், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி அடுப்பை நிறுத்திவிடவும். பிறகு இதனுடன் மல்லித்தழை, கருவேப்பிலை சேர்த்து கலந்து இதை குதிரைவாலி சாதத்துடன் சேர்த்து தேவையான உப்பு போட்டு கலந்து அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும். குதிரைவாலி நீர் உருண்டை ரெடி இதை ஊறுகாயுடன் தொட்டு சாப்பிடலாம். விருப்பப்பட்ட சட்னியுடன் ஜோடி சேரும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றை சுத்தமாக்கும். சிறுதானியம் சாப்பிடாத வர்களுக்கு இதுபோல் செய்து கொடுத்து அசத்தலாம்.
சாமை ஸ்ப்ரவுட் பொங்கல்
செய்ய தேவையான பொருட்கள்:
சாமை- ஒரு கப்
முளைவிட்ட பச்சை பயிறு -அரை கப்
மிளகு, சீரகம், இஞ்சித் துருவல் தலா -ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை -ஒரு ஆர்க்கு
தேங்காய் எண்ணெய் -ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் -இரண்டு டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு மிளகு, சீரகம், இஞ்சி துருவல் சேர்த்து வதக்கி சுத்தம் செய்து வைத்திருக்கும் சாமை மற்றும் முளைவிட்ட பயத்தம் பருப்பு சேர்த்து உப்பு போட்டு மூன்று கப் தண்ணீர் விட்டு மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு குக்கரை அணைத்துவிடவும்.
பிறகு பொங்கலில் நெய்விட்டு கிளறி பரிமாறவும். கம கம வாசனை உடன் ருசியாக இருக்கும். புதினா சட்னி தேங்காய் சட்னி என்று எதனோடும் சாப்பிடலாம்.